காவிரி நடுவர் மன்ற பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காவிரி நடுவர் மன்றத்தின் ஆயுட்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுவை மாநிலங்களுக்கிடையே காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டபிரச்சினையைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில், 15 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நடுவர் மன்றம்ஏற்படுத்தப்பட்டது.

காவிரிப் பிரச்சினை குறித்து இறுதித் தீர்ப்பு வெளியிட பல காலம் ஆகும் என்பதால், கடந்த 1991ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. அதன்படி ஆண்டுதோறும் தமிழகத்திற்கு கர்நாடகம், 205 டிஎம்சி அளவு நீரைவழங்க வேண்டும்.

இந்த உத்தரவை கண்காணிப்பதற்காக 1998ம் ஆண்டு பிரதமர் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது.நடுவர் மன்றத்தின் ஆயுள் காலம் 3 ஆண்டுகளாகும். தேவைப்பட்டால் மேலும் ஒரு ஆண்டுக்கு பதவி நீட்டிப்பு செய்ய முடியும்.

காவிரி நடுவர் மன்றத்தின் ஆயுள்காலம் இந்த மாதம் 5ம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாதநிலையில் ஆயுள்காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதுதொடர்பாக தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கருத்தை மத்திய அரசு கேட்டது. அனைத்துமாநிலங்களும் ஆயுள்காலத்தை நீட்டிக்க சம்மதித்தனர். இதையடுத்து மேலும் ஒரு ஆண்டுக்கு காவிரி நடுவர் மன்றத்தைநீட்டித்து மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை விரைவில் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவின் வலியுறுத்தலின் பேரில்,ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இப்போது ஒரு ஆண்டுக்கு காவிரி நடுவர் மன்றத்தின் ஆயுள் நீட்டிக்கப்பட்டு விட்டதால், இன்னும் ஒரு ஆண்டுவரை தீர்ப்பை பெற காத்திருக்க வேண்டும்.

நீதிபதி என்.பி.சிங் தலைமையிலான நடுவர் மன்றத்தில் ஆர்.எஸ்.ராவ், சுதிர் நாராயணன் ஆகிய மேலும் இரு உறுப்பினர்களும்உள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் தான் இறுதிக் கட்ட விசாரணை முடிவடையும் என்று தமிழக அரசுக்கானவழக்கறிஞர் உமாபதி தெரிவித்துள்ளர். அதன் பிறகே இறுதி தீர்ப்பு மத்திய அரசிடம் வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+