நீங்கியது தடை; தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்!
கரூர்:
கரூர் அருகே மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்துநேர்த்திக் கடனை செலுத்தினர்.
தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் நூதனமான முறையில் நேர்த்திக் கடன்களும், வழிபாடுகளும் காலம் காலமாக நடந்துவருகின்றன. அவற்றில் ஒன்று தான் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தும் நிகழ்ச்சி.ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நேர்த்திக் கடனை பல ஆண்டுகளாகவே கடைப்பிடித்து வருகிறார்கள். கரூர்மாவட்டம் மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோவிலில் தலையில் தேங்காய் உடைப்பது மிகவும் பிரசித்தமானதாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 19ம் தேதி இந்த நேர்த்திக்கடன் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இது மிகவும் கொடூரமாகஇருப்பதாகவும், இதை தடை செய்ய வேண்டும் என்றும் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான நீதிபதி சம்பந்தம் தமிழகஅரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்ற கரூர் மாவட்ட நிர்வாகம், இந்த ஆண்டு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை செலுத்த தடை விதித்தது.ஆனால் இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தடையை மீறி தேங்காய் உடைக்கப்படும் எனவும் அறிவித்தனர்.
இதையடுத்து கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் ஆகியோரை அழைத்து மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தியது. இதில் சிலநிபந்தனைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதை பக்தர்களும், கோவில் நிர்வாகிகளும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்துதடை விலக்கப்பட்டது.
இந் நிலையில் ஆடி 18ம் நாளான புதன்கிழமை இரவு மகாலட்சுமி அம்மன் காவிரி ஆற்றிலிருந்து ஊர்வலமாக கோவிலுக்குக்கொண்டு வரப்பட்டார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அம்மன் இன்று காலை கோவிலைவந்தடைந்தார்.
அதன் பின்னர் தலையில் தேங்காய் உடைக்கும் வைபவம் தொடங்கியது. ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் எனநூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையாக அமர்ந்திருக்க கோவில் பூசாரி அவர்களது தலையில் தேங்காயை உடைத்துபக்தர்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தார்.
இந்த நிகழ்ச்சியையொட்டிபலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேங்காய் உடைத்ததால் பல பக்தர்களுக்குதலையிலிருந்து ரத்தம் கொட்டியது. அந்த இடத்தில் கோவில் பூசாரி விபூதி மற்றும் மஞ்சளைத் தூவினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications