மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடி!
சேலம்:
மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியைத் தாண்டியுள்ளது. தொடர்ந்து அணைக்கு அபரிமிதமான நீர் வரத்து உள்ளதால்நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக காவிரிப் பாசனப் பகுதியை காய வைத்து விட்ட காவிரி ஆறு, இந்த முறை போதும் போதும் என்றுகூறும் அளவுக்கு வெள்ளமாக கரைபுரண்டு ஓடி வருகிறது.இதற்குக் காரணம் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையே. கர்நாடகத்தின் இருமுக்கிய அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகியவற்றிலிருந்து மொத்தமாக, விநாடிக்கு 1 லட்சத்து 70,000 கன அடி நீர்வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளது.
இந்தத் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. புதன்கிழமை ஒரே நாளில் 13 அடி அளவுக்கு மேட்டூர் நீர்மட்டம்உயர்ந்தது. இதனால் அணையின் நீர் இருப்பு வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி 102 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 37,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. ஆடிப்பெருக்குக்காக விநாடிக்கு 12,000 கன அடிநீரை தமிழக அரசு திறந்து விட உத்தரவிட்டிருந்தது.
ஆடிப் பெருக்கு விழா முடிவடைந்து விட்டதால் தண்ணீர் திறந்து விடுவது இன்றுடன் நிறுத்தப்படும் எனத் தெரிகிறது மேட்டூர்அணைக்கு தொடர்ந்து அபரிமிதமாக நீர் வரத்து இருப்பதால் அணை இன்னும் ஓரிரு நாட்களில் நிரம்பி விடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications