சிவராஜ் பாட்டீல் "ஆப்சென்ட்: அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர்
டெல்லி:
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து விளக்கமளிக்க உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்வராததால் அவையை சபாநாயகர் சிறிது நேரம் ஒத்திவைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் மாநிலத்தில் மாணவர்கள் மற்றும் அரசுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையால் உருவாகியுள்ளபொருளாதார நெருக்கடி குறித்து இன்று விவாதம் நடைபெற்றது.அம்மாநிலத்தில் மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு மத்தியஅரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து விளக்கமளிக்க உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிஉத்தரவிட்டார். ஆனால் அப்போது சிவராஜ் பாட்டீல் அவையில் இல்லை.
இதனால் கோபமடைந்த சோம்நாத் சாட்டர்ஜி, இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை என்னால் அனுமதிக்க முடியாது. எனவேஅவையை 10 நிமிடம் ஒத்தி வைப்பதாக அறிவித்தார். உடனே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சியினரைப் பார்த்துவெட்கம், வெட்கம் என்று கோஷமிட்டனர்.
உள்துறை அமைச்சர் அவையில் இல்லாததால் அவையை சபாநாயகர் ஒத்திவைத்த சம்பவம் லோக் சபாவில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.
இதன் பிறகு அவைக்கு வந்த சிவராஜ் பாட்டீல், மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும், மாநில அமைச்சர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications