சென்னை: பெண் அறங்காவலரைக் கொன்று நகை, பணம் கொள்ளை
சென்னை:
சென்னையில் தனியாக வசித்து வந்த பெண் அறங்காவலரை வெட்டிக் கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னை பேசின்பிரிட்ஜ் மேம்பாலம் அருகே ஸ்ரீபூமாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலின் பரம்பரை அறங்காவலராகஇருந்தவர் நாகபூஷணம். இவர் கோவிலை ஒட்டி எஸ்.டி.டி. பூத்தும், அடுத்தடுத்த மூன்று கடைகளயும் கட்டி வாடகைக்குவிட்டிருந்தார்.எஸ்.டி.டி. பூத் இருக்கும் மேல்மாடியிலேயே இவர் தனியாக வசித்து வந்தார். நாகபூஷணம் நடத்தி வந்த எஸ்.டி.டி. பூத்தில்வியாசர்பாடியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
வழக்கம்போல் அவர் நேற்று காலை வந்தார். நாகபூஷணத்தின் வீட்டுக் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதேபோல்கோவில் பூசாரி ரமேஷ் பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது கோவிலும் திறக்கப்படாமல் இருந்தது.
நாகபூஷணத்தின் வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல்கொடுத்தனர்.
தகவலறிந்த வடக்கு போலீஸ் இணை கமிஷனர் சைலேந்திரபாபு, புளியந்தோப்பு துணை கமிஷனர் சம்பத்குமார் மற்றும்போலீஸார் விரைந்து வந்து கதவை திறந்து பார்த்தபோது நாகபூஷணம் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்தார்.
கொள்ளையர்கள் கோவில் முன்னுள்ள பந்தல் வழியாக ஏறி குதித்து, உள்பக்கமாக தாழிட்டிருந்த கதவை திறக்க முயற்சித்ததும்உஷாரடைந்த நாகபூஷணம், மர்ம நபர்களை எதிர்த்து போராடியபோது இரும்புக் கம்பியினால் தலையில் பயங்கரமாக தாக்கிகொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கொள்ளையர்கள், நாகபூஷணம் அணிந்திருந்த தங்க நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.இந்தக் கொலை மற்றும் கொள்ளை குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications