சங்கரராமன்: மேலும் 2 பேருக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஏற்கனவே ஜெயேந்திரர், விஜயேந்திரர், ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்டோர் ஜாமீனில்விடுதலையாகியுள்ளனர். அப்பு, கதிரவன் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில்வஸ்டர் ஸ்டாலின், அருண் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சர்தார் ஜக்காரியா உசேன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications