வீரப் பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது: ஜெ. வழங்குகிறார்
சென்னை:
சுதந்திர தின நிகழ்ச்சிகளின்போது வீரச் செயல் புரிந்த பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருதை முதல்வர் ஜெயலலிதாவழங்கவுள்ளார்.
சுதந்திரதினத்தையொட்டி சென்னையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமை காலை புனித ஜார்ஜ்கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினஉரையாற்றுகிறார் ஜெயலலிதா.அதன் பின்னர் காவலர் அணிவகுப்பு, பல்வேறு துறையினரின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு ஆகியவற்றைப்பார்வையிடுகிறார். மேலும், வீரச் செயல் புரிந்த பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருதும் வழங்கப்படுகிறது. விருது பெறும்பெண்ணின் பெயர் நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்படும்.
இதுதவிர ஊனமுற்றோர் நலனுக்காக பாடுபட்டவருக்கான விருது, மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது, கிராமச்சுகாதார மேம்பாட்டுக்கான விருது, தூய்மையான கிராம இயக்க விருது உள்ளிட்டவற்றையும் அவர் வழங்குகிறார்.
அத்துடன் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் விழாவின்போது ஜெயலலிதா வழங்குகிறார்.
கோட்டை முன் உள்ள புல்வெளியில் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், முக்கியஅழைப்பாளர்கள் அமர்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் மிக பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 10,000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications