கராத்தே மீது ஆற்காடு தம்பி அவமதிப்பு வழக்கு
சென்னை:
நில அபகரிப்பு தொடர்பாக சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் மீது, திமுக பொருளாளர் ஆற்காடுவீராசாமியின் தம்பி தேவராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் மாநிகராட்சிக்குச் சொந்தமான 18 கிரவுண்டு நிலத்தை ஆற்காடு வீராசாமியும், அவரது தம்பிகுடும்பத்தினரும் அபகரித்து விட்டதாக துணை மேயர் கராத்தே தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலம் மீட்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து தியாகராஜனுக்கு ஆற்காடு வீராசாமி வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில் ஆற்காடுவீராசாமியின் தம்பி தேவராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், சென்னை அண்ணா நகர் பெரியகூடல் கிராமத்தில் 18 கிரவுண்டு நிலத்தை பெங்களூரைச் சேர்ந்த ஒருநிறுவனத்திடமிருந்து விலைக்கு வாங்கினோம். இதுதொடர்பாக சிவில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
அந்த வழக்கு விசாரணையின்போது, இந்த விஷயத்தில் மாநகராட்சி, மேயர், துணை மேயர், ஆட்சித் தலைவர் என யாருமேதலையிடக் கூடாது என்று 2001ம் ஆண்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் இந்த உத்தரவை அவமதிக்கும் வகையில், உண்மைக்குப் புறம்பான தகவல்களை கராத்தே தியாகராஜன் தொடர்ந்துகூறி வருகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். எனவே கராத்தே தியாகராஜனை தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications