ஓய்வு பெறுகிறார் பர்னாலா.. புதிய ஆளுனர் யார்?
சென்னை:
தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா வரும் நவம்பர் மாதத்துடன் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். தொடர்ந்து தமிழகஆளுனர் பதவியில் நீடிக்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரைவில் புதிய ஆளுனர்அறிவிக்கப்படவுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடித்து வந்த ராம்மோகன் ராவ் காங்கிரஸ் பதவிக்கு வந்தவுடன் மாற்றப்பட்டு கடந்தஆண்டு நவம்பர் 3ம் தேதி புதிய ஆளுநிராக சுர்ஜித் சிங் பர்னாலா நியமிக்கப்பட்டார். திமுக தலைவர் கருணாநிதியின்கோரிக்கையை ஏற்று அவரை ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு மாற்றியது.அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.
தொடர்ந்து இந்தப் பதவியில் நீடிக்க பர்னாலா விரும்பவில்லை என்று தெரிகிறது. சொந்த மாநிலமான பஞ்சாபுக்குத் திரும்பிமீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட அவர் ஆர்வம் கொண்டுள்ளார். தனது விருப்பத்தை ஏற்கனவே மத்திய அரசிடம் பர்னாலாதெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் பர்னாலா மீது திமுகவுக்கும் அவ்வளவாக திருப்தி இல்லை. தங்களுக்கு ஆதரவாக பர்னாலா இருப்பார் என்று திமுககருதியது. ஆனால், பர்னாலா விதிமுறைகளுக்கு ஏற்பவே நடந்து வருகிறார். இதனன் திமுக அவர் மீது அப்செட்டில்இருக்கிறது.
இந் நிலையில் பர்னாலாவுக்குப் பதில் நியமிக்கப்படப் போகும் புதிய ஆளுனர் யார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்புஎழுந்துள்ளது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், தங்களுக்கு சாதகமான ஒருவரையேஆளுநராக்குவதில் திமுக மும்மரம் காட்டி வருகிறது.
கடந்த 1990ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தமிழக ஆளுநராக பர்னாலா இருந்தார். அப்போது திமுகஆட்சியைக் கலைக்க அறிக்கை கேட்டு மத்திய அரசு வலியுறுத்தியும், அறிக்கை அனுப்பவில்லை.
இருந்தாலும், ஆளுனரின் அறிக்கை இல்லாமலேயே மத்திய அரசுக்குப் பணிந்து திமுக ஆட்சியைக் கலைத்து புதிய வரலாறுபடைத்தார் ஜெயேந்திரரின் தீவிர பக்தரான ஆர்.வெங்கட்ராமன்.
ஆந்த ஆட்சிக் கலைப்பைக் கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்தார் பர்னாலா.பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்ட பர்னாலா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். பின்னர் பாஜவுக்கு நெருக்கமாகி அக்கட்சியின் ஆட்சியில் உத்தராஞ்சல் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து ஆந்திர ஆளுநராகவும் தற்போது தமிழக ஆளுநிராகவும் இருக்கிறார். கடந்த 1985ம் ஆண்டு பஞ்சாப்முதல்வராக பர்னாலா இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்ப முடிவுசெய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications