ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்: கங்குலி மீண்டும் கேப்டன்
ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு கேப்டனாக கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்திருந்த போது ஒரு போட்டியில் இந்திய அணி தாமதமாக பந்து வீசியதாக கூறிசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கேப்டன் கங்குலிக்கு 6 போட்டிகளில் விளையாட தடை விதித்தது.கங்குலிக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது.ஆனால் முதலில் அதை ஏற்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மறுத்து விட்டது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டிக்கு திராவிட் கேப்டனாகநியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் கங்குலி மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு மீண்டும் ஐசிசிக்கு கோரிக்கைவிடுத்தது. இதை ஏற்றுக் கொண்ட ஐசிசி, கங்குலி மீதான தடையை 6 போட்டிகளிலிருந்து 2 போட்டிகளாக குறைத்தது.
இதைத் தொடர்ந்து இலங்கையில் இந்திய அணி கலந்து கொண்ட 3வது போட்டியிலிருந்து கங்குலி மீண்டும் விளையாடதொடங்கினார்.
இந் நிலையில் இம்மாத இறுதியில் இந்திய அணி ஜிம்பாப்வே செல்கிறது. இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்தியஅணியின் கேப்டனாக கங்குலி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தப் போட்டியில் விளையாடவுள்ளமற்ற வீரர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications