லட்சுமண் கதிர்காமர் சுட்டுக் கொலை: இலங்கையில் நெருக்கடி நிலை பிரகடனம்
கொழும்பு:
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா பிரகடனப்படுத்தியுள்ளார்.
கொலையாளிகளைப் பிடிக்க கொழும்பு நகரில் வீடு வீடாக சோதனை நடத்தப்படவுள்ளது. இதையடுத்து வீடுகளை விட்டுபொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
73 வயதான கதிர்காமர் சந்திரிகாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்து வந்தார். விடுதலைப் புலிகளை மிகக் கடுமையாகஎதிர்த்து வந்த கதிர்காமர் நேற்றிரவு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டுவிட்டு தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
இரவு 10.30 மணியளவில் கொழும்பில் மிகப் பாதுகாப்பான பகுதியான லண்டன் பாலசையடுத்த விஜேரம மாவட்டேயில்உள்ள தனது வீட்டுக்கு அருகே வைத்து சுடப்பட்டார். இதில் அவரது தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்தன.
இதையடுத்து அவர் உடனடியாக தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் குழுஉடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு குண்டுகளை அகற்ற முற்பட்டது.
ஆனால், சுமார் ஒன்னேகால் மணி நேர அறுவை சிகிச்சை பலனளிக்காமல் அவர் நள்ளிரவு 12.15 மணியளவில் இறந்தார்.
கொலை நடந்த சாலைக்கு வெகு தூரத்தில் இருந்தபடி சரியாக குறி பார்த்து சுடும் நபர் (ஸ்னைபர்) தான் கதிர்காமரை கொலைசெய்துள்ளார். கொலையை அடுத்து ராணுவ ஹெலிகாப்டர்கள் உதவியுடன் கொலையாளிகள் தேடுதல் வேட்டை நடந்தது.ஆனால், யாரும் பிடிபடவில்லை.
அவரது கொலையையடுத்து நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அதிபர் சந்திரிகா பிரகடனப்படுத்தியுள்ளார்.
இந்தக் கொலைக்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தயா ரத்னயாகேகுற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இந்தக் கொலைக்கு புலிகள் பொறுப்பேற்கவில்லை.
கிருஸ்துவத் தமிழரான கதிர்காமர், யாழ்பாணத்தைச் சேர்ந்வர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். கடந்த முறைசந்திரிகா அதிபராக இருந்தபோதும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த ஆண்டு மீண்டும் அமைச்சரானார்.
தொடர்ந்து விடுதலைப் புலிகளை எதிர்த்து வந்த கதிர்காமர், பல நாடுகளில் புலிகள் அமைப்பு தடை செய்யப்படவும் முக்கியகாரணமாக இருந்தார்.
இதற்கிடையே காலக் கெடு ஏதும் இல்லாமல் நாடு முழுவதும் அவரச கால நிலையை சந்திரிகா பிறப்பித்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்து விசாரிக்க முடியும்.
பலத்த பாதுகாப்புடன் செயல்பட்டு வந்த கதிர்காமரின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும், மேலும் 100 கமாண்டோக்களைஅவரது பாதுகாப்புக்காக நியமிக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டிருந்தது. இந் நிலையில் இந்தக் கொலை நடந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications