டைட்லர், பர்னாலாவுக்கு தீவிரவாதிகள் குறி?
டெல்லி:
சுதந்திர தினத்திற்கு முன் தமிழக கவர்னர் பர்னாலாவை கொல்ல சீக்கிய தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக திடுகிடும்தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே மாதம் டெல்லியில் 2 தியேட்டர்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் ஒருவர் பலியானார். 10க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த டெல்லி போலீஸார் ஜக்தார் சிங் ஹவாரா என்பவனை கைது செய்தனர்.அவனிடம் விசாரணை நடத்தியதில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு போராடும் பாபர் கல்சா என்ற தீவிரவாத இயக்கத்தைசேர்ந்தவன் என தெரிய வந்தது.
தொடர்ந்து போலீஸார்ர நடத்திய விசாரணையில் அந்த தீவிரவாத இயக்கத்தின் கொலை பட்டியலில் தமிழக கவர்னர் பர்னாலா,சமீபத்தில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஜகதீஷ் டைட்லர், காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார், பஞ்சாப் மாநிலமுன்னாள் டிஜிபி கே.பி.எஸ். கில் காங்கிரஸ் பிரமுகர் மனீந்தர் சிங் பிட்டா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருப்பது தெரியவந்தது.
வருகிற சுதந்திர தினத்திற்கு முன் இவர்கள் 5 பேரையும் கொல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக பாபர்கல்சா தீவிரவாதிகள் ரகசியமாக வயர்லெஸில் பேசியதை போலீஸார் இடைமறித்து கேட்டதிலும் இந்த தகவல்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
இந்த திடுக்கிடும் தகவல்களை தொடர்ந்து டெல்லி, பஞ்சாப் மாநில போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கவர்னர் பர்னாலாஉட்பட 5 பேருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி கொலையின்போது டெல்லியில் சீக்கியர்கள் 3,000 பேர் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவிசாரணை நடத்திய நானாவதி கமிஷன் அறிக்கையில் ஜகதீஷ் டைட்லர் மற்றும் சஜ்ஜன் குமார் எம்.பி. மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவர் மீதும் பாபர் கல்சா தீவிரவாதிகள் வெறியோடு இருப்பதாக கூறப்படுகிறது.எனவே இவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications