வீரப்பன் சமாதியில் முத்துலட்சுமி புதிய சபதம்
மேட்டூர் :
எனது கணவரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில், புதிய அமைப்பு ஏற்படுத்தி மலைவாழ் மக்களுக்காக பாடுபடப்போகிறேன் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு முத்துலட்சுமியை அரசியலுக்கு இழுக்க பலர் முயன்றனர். ஆனால் முத்துலட்சுமி பிடிகொடுக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சமீப காலமாக முத்துலட்சுமி அரசியலில் புகப் போவதாக மறைகமாக பேசிவந்தார். விஜய்காந்த் கட்சியில் சேர முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது.மேட்டூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும், ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து போட்டியிடவிரும்புவதாகவும், அப்படி முடியாவிட்டால் சுயேச்சையாக நிற்கப் போவதாகவும் அவர் கூறி வந்தார்.
அதிரடிப்படை போலீஸாரால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களை ஒன்று திரட்டி புதிய அமைப்பை ஏற்படுத்தி, அவர்களுக்குநியாயம் கிடைக்கச் செய்ய போராட்டம் நடத்தப் போவதாகவும், தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்ததயாராகி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந் நிலையில், மேட்டூர் அருகே மூலக்காட்டில் உள்ள வீரப்பன் சமாதிக்கு தனது ஊரைச் சேர்ந்த பலருடன் முத்துலட்சுமி நேற்றுசென்றார். அங்கு பூஜை செய்து வணங்கினார். பின்னர் கண்களில் நீர் மல்க வீரப்பன் சமாதி முன்பு சபதம் ஏற்றார். அவர்உறுதிமொழியை வாசிக்க உடன் வந்தவர்கள் திரும்பக் கூறி சபதம் ஏற்றனர்.
அந்த உறுதிமொழியின் விவரம்:
வாழ்க்கை முழுவதும் நீங்கள் இடைவிடாமல், உள்ளத்தில் உறுதியுடன் ஏழை மக்களுக்கு உதவி (?) செய்து வந்தீர்கள். நீங்கள்மறைந்தாலும் உங்கள் நற் செயல், நல் சிந்தனையின் (??) அடிப்படையில் நாட்டிலுள்ள மக்களை விழித்தெழச் செய்து (???)புதிய சமுதாயம் தோன்றிட (அப்படிப் போடு) எங்களது உயிரையும், பொருளையும் உண்மையுடன் அர்ப்பணிப்போ என்றுசூளுரைப்பதாக முத்துலட்சுமியும், மற்றவர்களும் சபதம் ஏற்றனர்.
பின்னர் முத்துலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிரடிப்படையினரால் வனப் பகுதி கிராமங்களில் உள்ளஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கையை இழந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு நிவாரணமும்வழங்கப்படவில்லை.
அவர்களை சந்திக்கப் போகிறேன். அவர்களுக்கு என்ன மாதிரியான உதவிகள் தேவை என்பதைக் கண்டறிந்து அதற்கானநடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
எனது கணவரின் கனவுகள் நனவாகப் பாடுபடுவேன். மக்களுக்காக புதிய பேரவையை ஏற்படுத்தி பாடுபடப் போகிறேன்.அரசியலுக்கு வர மாட்டேன்.
எனது கணவர் அரசுக்கும், சட்டத்திற்கும் தவறானவராகத் தோன்றுகிறார். ஆனால் மக்களுக்கு நல்லவராகவே இன்னும்இருக்கிறார். நானும் மக்கள் நலனுக்காகப் பாடுபடப் போகிறேன் என்றார் முத்துலட்சுமி.
தான் ஏற்படுத்தப் போகும் புதிய அமைப்பின் நோக்கம் குறித்து விளக்க ஈரோடு, கோபிச் செட்டிப்பாளையம், பெண்ணாகரம்,சத்தியமங்கலம், தர்மபுரி, மேட்டூர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும் முத்துலட்சுமிதிட்டமிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications