பக்கத்து வீட்டுக்காரனின் தொல்லை: 5 பேர் கொண்ட குடும்பமே கூண்டோடு தற்கொலை
வேலூர்:
பக்கத்து வீட்டுக்காரனின் தொல்லை தாங்க முடியாமல் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஆசிரியர் ஒருவர் தனதுகுடும்பத்தினர் 5 பேருடன் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர்-நாட்ராம்பள்ளி சாலையில் எல்லப்பள்ளி என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுப்ரமணியம். இவர் ஜங்களாபுரம் அரசுஉயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வந்தார்.எல்லப்பள்ளியில் கடந்த 2002ம் ஆண்டு இவர் புதிய வீடு கட்டி அங்கு குடும்பத்துடன் குடியேறினார்.
இவருக்கு பக்கத்து இடத்தில் மின்வாரியத்தில் பணியாற்றி வந்த ராஜேந்திரன் என்பவர் 2004ம் ஆண்டில் வீடு கட்டி குடிவந்தார்.
அப்போது சுப்ரமணியத்தின் நிலத்தை சிறிதை ராஜேந்திரன் ஆக்கிரமித்தார். இது தொடர்பாக சுப்பிரமணியத்துக்கும்ராஜேந்திரனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
தவறு செய்த ராஜேந்திரன் மீது போலீஸிலும் புகார் கொடுத்துள்ளார் சுப்பிரமணியம். ஆனால், ராஜேந்திரனிடம் காசு வாங்கிக்கொண்ட போலீசார் இந்த விவகாரத்தை விசாரிக்காமல் விட்டுவிட்டனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக சுப்பிரமணியம் மற்றும் ராஜேந்திரன் குடும்பங்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.ஆனால், ரவுடித்தனத்துக்கு பேர் போன ராஜேந்திரன் தனது கும்பலைக் கூட்டி வந்து சுப்பிரமணியத்தை மிரட்டிஒடுக்கியிருக்கிறார்.
இதனால் வெறுத்துப் போய் இருந்தனர் சுப்பிரமணியமும் அவரது குடும்பத்தினரும்.
இந் நிலையில் நேற்று காலை ஆசிரியர் சுப்பிரமணியத்தின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. அவரது வீட்டுக்கு அருகே வசித்துவரும் ராஜம்மாள் என்பவர் வீட்டின் அருகே சென்று பார்த்தபோது கதவின் இடுக்கில் ஒரு காகிதம் செருகப்பட்டிருந்தது.
அதை எடுத்துப் பார்த்தபோது போலீஸ் மற்றும் உறவினர்கள் மட்டும் உள்ளே வரவும், மற்றவர்கள் வர வேண்டாம் என்றுஎழுதப்பட்டிருந்தது. இதையடுத்து ராஜம்மாள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து கதவைஉடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கே சுப்பிரமணியம், அவரது மனைவி காமாட்சி, மகள்கள் அன்னபூர்ணா, அர்ச்சனா, சொப்னா ஆகியோர் இறந்துகிடந்தனர். அவர்கள் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வருகிறது.
இறந்தவர்களில் அன்னபூர்ணாவும், அர்ச்சனாவும் கல்லூரி மாணவிகள், சொப்னா 10வது வகுப்பு படித்து வந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
சுப்பிரமணியம் அருகே 8 பக்க கடிதம் ஒன்று இருந்தது. மேலும், தமிழக முதல்வர், உயர் போலீஸ் அதிகாரிகள், டி.எஸ்.பி.உள்ளிட்டோருக்கு தனித் தனியாகவும் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
டி.எஸ்.பிக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தில் பக்கத்து வீட்டு ராஜேந்திரன் உள்ளிட்ட 13 பேரின் பெயர்களை சுப்பிரமணியம்குறிப்பிட்டுள்ளார்.
ரவுடிப் பயல் ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னையும், தனது குடும்பத்தையும் என்னென்ன மாதிரியாககொடுமைப்படுத்தினார், அவமானப்படுத்தினார், அசிங்கப்படுத்தினார் என்பதை விலாவாரியாக எழுதியுள்ளார் அப்பாவியானசுப்பிரமணியம்.
ராஜேந்திரன் குடும்பத்தின் தொல்லை தாங்க முடியாமல்தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்தெளிவாகக் கூறியிருக்கிறார்.
சினிமாவில் வரும் போலீஸ் மாதிரி, எல்லாம் முடிந்த பிறகு இப்போது ராஜேந்திரன், அவனது மனைவி நாகராணி உள்ளிட்ட 15பேரை அந்த ஊர் காக்கிககள் கைது செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications