மோடியை பாராட்ட வார்த்தைகளே இல்லை: அத்வானி
பதான்:
குஜராத்தில் பாஜகவை வலுப்படுத்தியவர் நரேந்திர மோடி என அத்வானி மீண்டும் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
மோடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் தலைமையிலான எம்எல்ஏக்களும்எம்பிக்களும் குஜராத்தில் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். படேலின் வீட்டில் 30க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் கூடிப் பேசிவருகின்றனர்.டெல்லிக்கு வந்த படேல் அத்வானியை சந்திக்காமல் மாஜி பிரதமர் வாஜ்பாயை சந்தித்து மோடியை மாற்ற வேண்டும் என்றுகோரிக்கை வைத்தார். கட்சியில் அத்வானியை மீறி முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க முடியாத நிலையில் உள்ள வாஜ்பாய்,எந்த உறுதிமொழியும் தராமல் படலை திருப்பி ஊருக்கு அனுப்பி வைத்தார்.
இந் நிலையில் மோடிக்கு எதிராக முன்னாள் டெல்லி முதல்வரும் மூத்த பாஜக தலைவர்களில் ஒருவருமான மதன்லால்குரானாவும் குரல் கொடுக்க ஆரம்பித்தார். அத்வானியை தலைவராக ஏற்க முடியாது என்று கூறி சில வாரங்களுக்கு முன்பரபரப்பை ஏற்படுத்திய குரானா இம்முறை அத்வானியோடு மோடியும் பதவி விலக வேண்டும் என்றார்.
ராஜிவ் மரணத்தைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் செய்ததாக காங்கிரஸார் மீது குற்றம் சாட்டி பாஜகபோராட்டம் நடத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறிய குரானா, மதக் கலவரத்தை முன்னின்று நடத்தி பல உயிர்கள்பலியாகக் காரணமாக இருந்த மோடியை முதலில் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
மோடிக்கு பல தரப்பில் இருந்து ஆபத்து வந்ததை உணர்ந்த அத்வானி குஜராத் விரைந்தார். அங்கு மூத்த தலைவர்களுடன்ஆலோசனை நடத்திய அத்வானி, மோடி அரசைப் பாராட்டினார்.
மேலும் மோடிக்கு முழு ஆதரவைத் தெரிவித்த அவர் அவரை பதவி நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார். இந் நிலையில்இன்று பொதுக் கூட்டத்தில் பேசிய அத்வானி,
குஜராத்தில் பாஜகவை வலுப்படுத்திய தலைவர் மோடி தான். அவரால் தான் இன்று மாநிலத்தில் கட்சி மிகவும் வலுவாக உள்ளது.அவர் மிக மிக நேர்மையாகவும், மக்களுக்கு உதவும் வகையிலும் அரசை நடத்தி வருகிறார்.
நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வரும் மோடியையும் அவரது அமைச்சர்களையும் பாராட்டஎன்னிடம் வார்த்தைகள் இல்லை.
இதே வேகத்தில் மோடியின் அரசு செயல்பட்டால் நாட்டுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே ஒரு உதாரணமாக குஜராத் இருக்கும்என்றார் அத்வானி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications