தமிழகத்துக்கு பூகம்ப ரிஸ்க் அதிகரிப்பு: நிபுணர்கள் எச்சரிக்கை
சென்னை:
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகபூகம்பவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தைத் ஆசிய கண்டத்தின் பலநாடுகளிலும் பெரிய அளவில் நிலவியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.நாடுகளின் கடலோர எல்லைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பூமிக்கு அடியிலும், நிலத் தட்டுக்களில் பெருமளவில்மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல்வேறு விதமான மாற்றங்களை இந்தியா, குறிப்பாக தென்னிந்தியா சந்திக்கும் எனபூகம்பவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் இப்போதுஅதற்கான வாய்ப்புகள் அதிகரித்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியமாவட்டங்கள் பூகம்பம் ஏற்படாத பகுதிகளின் பட்டியலில் இருந்தது.
ஆனால் தற்போது பூகம்பம் அதிகம் ஏற்படுவதற்கான பட்டியலின் கீழ் இவை கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவரை 2வதுமண்டலத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் இருந்து வந்தன. தற்போது இவை 3வது மண்டலத்திற்குமாற்றப்பட்டுள்ளன.
அதேசமயம், கோவை, தேனி உள்ளிட்ட பகுதிகள் அதிகபட்ச ஆபத்துப் பகுதியில் தொடர்ந்து உள்ளன. தமிழகத்தின் மற்றபகுதிகள் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ளன.
சுனாமி தாக்குதல் மற்றும் இந்தோனேசிய நில நடுக்கத்திற்குப் பிறகு இந்தியப் பெருங்கடலில் இதுவரை 1,300 பெரிய மற்றும்சிறிய அளவிலான நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications