மாதா அமிர்தானந்தமயியை குத்திக் கொல்ல முயற்சி
கொல்லம்:
![]() |
கேரளாவைச் சேர்ந்த பெண் சாமியார் மாதா அமிர்தானந்தமயியை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டார். கத்தியால் குத்த முயன்றவரை தடுக்க முயன்ற போது அமிர்தானந்தமயியின் சீடர்கள் 3 பேருக்கு காயம்ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர் பிரபல பெண் சாமியார் மாதா அமிர்தானந்தமயி. கொல்லத்தில் இவரது தலைமை ஆசிரமம் உள்ளது.இது தவிர மதுரை, சென்னை உட்பட இந்தியாவின் பல பகுதிகளிலும், பல்வேறு நாடுகளிலும் இவருக்கு ஆசிரமங்கள் உள்ளன.
இந் நிலையில் நேற்று இவர் கொல்லத்திலுள்ள ஆசிரமத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போதுகத்தியுடன் வந்த ஒருவர் வேகமாக சென்று அமிர்தானந்தமயியை குத்த முயன்றார்.
உடனே அங்கு நின்று கொண்டிருந்த மாதா அமிர்தானந்தமயியின் சீடர்கள் அவரைத் தடுத்தனர். இதில் 3 பேருக்கு கத்திக் குத்துகாயம் ஏற்பட்டது. பின் அந்த நபரை பிடித்த போலீஸிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்திய போது கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்த அவரது பெயர் பவித்ரன்என்றும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து மாதா அமிர்தானந்தமயி கூறுகையில், உலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால் மரணமும் உண்டு. இதனால் நான்மரணத்தை குறித்து கவலைப்படவில்லை. என்னை கொல்ல முயன்றவரை நான் மன்னிக்கிறேன். என் வழி நடப்பவர்களும்அவரை மன்னிக்க வேண்டும்.
இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்காக நான் பக்தர்களை சந்திப்பதை நிறுத்தப் போவதில்லை. தொடர்ந்து நான் எனது பக்தர்களைசந்திப்பேன் என்றார்.
மாதா அமிர்தானந்தமயியை கொல்ல முயன்ற சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீவிரவிசாரணை நடத்தப்படும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications