பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது: ப.சிதம்பரம்
காரைக்குடி:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிரவேறு வழியில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
காரைக்குடி வந்த ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்துவருகிறது. இதே நிலை நீடித்தால் இந்த வருடம் இந்திய எண்ணை நிறுவனங்கள் ரூ. 30,000 கோடி முதல் 40,000 கோடி வரைநஷ்டத்தை சந்திக்கும்.காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவிக்கு வந்தபோது சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணை விலை பேரலுக்கு 28 அமெரிக்கடாலராக இருந்தது. ஆனால் இப்போதைய விலை 67 அமெரிக்க டாலராக உள்ளது.
இதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை.
கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. 12வது நிதிக்கமிஷனுக்குப் பிறகு மத்திய அரசுஅனைத்து மாநிலங்களுக்கும் தாராளாக நிதி ஒதுக்கியுள்ளது.
இதனால் மாநில அரசுக்கு வரி வருமானத்தில் கிடைக்கக்கூடிய பங்கு அதிகரித்துள்ளது. மேலும் நிதிக்கமிஷன் அறிக்கையின்படிமாநில அரசுகளுக்கு மானிய அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து மாநில அரசுகளுக்கும் இன்று ஏராளான நிதி இருப்பு இருக்கிறது. இதே போல தமிழக அரசுக்கும் நிதி இருப்புஅதிகமிருக்கிற தைரியத்தில் பல சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன.
ஆனால் அடிப்படை வளர்ச்சி திட்டங்களுக்கு அவர்கள் இதுவரை வித்திடவில்லை. சமீபத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்காகரூ.13,500 கோடியை உலக வங்கி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி குடிநீர், சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகளுக்காகசெலவிடப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications