விஜயகாந்த் பேனர்கள்: போலீசார் அகற்றம்!
சென்னை :
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்தின் பேனர் உள்பட அரசியல்கட்சிகளின் டிஜிட்டல் பேனர்களை போலீஸார் அகற்றினர்.
சென்னையில் டிஜிட்டல் பேனர்களின் பெருக்கம் அதிகரித்து விட்டது. கட்சிகளின் வட்டச் செயலாளரின் மகள்காதுகுத்துக்கு ஆரம்பித்து எதற்கெடுத்தாலும் சிறிய, பிரமாண்ட (பொருளாதார வசதிக்கு ஏற்ப) சைசில் டிஜிட்டல்பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.அரசியல் கட்சிகளின் பேனர்களை விட, நடிகர் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினரின் பேனர்கள் தான் அதிகஅளவில் பேனர்கள், கட் அவுட்களை வைத்து வருகின்றனர்.
இந்த பேனர்களை இத்தனை நாட்களாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட போலீசார், விஜய்காந்த் கட்சிஆரம்பிக்கப் போகும் நிலையில், திடீரென அவற்றை அகற்றியுள்ளனர்.
மதுரையில் நடக்கப் போகும் ரசிகர் மன்ற மாநில மாநாடு, கட்சி தொடக்க விழாவையொட்டி நகர் முழுவதும்பல்வேறு இடங்களில் பேனர்களைக் கட்டி கலக்கி வருகின்றனர் விஜயகாந்த் ரசிகர்கள்.
திருவான்மியூர் சிக்னல் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை நெடுகிலும் பல்வேறு இடங்களில் விஜயகாந்த்மன்றத்தினர் பேனர்கள் வைத்திருந்தனர்.
இந் நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு உள்ளதாகக் கூறி அவற்றை போலீசார் அகற்ற முடிவு செய்தனர்.இதையடுத்து அரசியல் கட்சியினர் பலர் தங்களது பேனர்களை அகற்றி பத்திரமாக எடுத்துச் சென்றுவிட்டனர்.(போலீசார் அகற்றினால் நேராக மாநகராட்சி லாரிக்குப் போய்விடும் என்பதால்)
ஆனால் விஜயகாந்த் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரின் பேனர்கள் மட்டும்அகற்றப்படாமல் இருந்தன. அவற்றை போலீஸார் இன்று அகற்றி அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications