நக்கீரன் கோபாலின் ஜாமீன் நிபந்தனை தளர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர்கோபாலுக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பொடா சட்டத்தின் கீழ் கோபால் கைது செய்யப்பட்டார். உரிமம்இன்றி துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அதே ஆண்டுடிசம்பர் மாதம் 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் கோபாலை ஜாமீனில் விடுதலை செய்தது.பூந்தமல்லி நீதிமன்றத்தில் வாரம் ஒருமுறை ஆஜராக வேண்டும். வழக்கு விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்புஅளிக்க வேண்டும். நீதிமன்ற அனுமதியின்றி சென்னை நகரை விட்டு வெளியேறக் கூடாது என்று அப்போதுநிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்த நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று கோரி கோபால் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுசெய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.டி. தினகரன், எஸ்.கே. கிருஷ்ணன் ஆகியோர் அடங்கியபெஞ்ச், நிபந்தனைகளை ரத்து செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications