சூறாவளி சுற்றுப் பயணம் தொடங்கும் வைகோ
சென்னை:
மதிமுகவினரை உற்சாகப்படுத்தும் வகையிலும், தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையிலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் மதிமுகவும்,சோம்பல்முறித்துக் கொண்டு களத்தில் குதித்துள்ளது.செப்டம்பர் 6ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள், தேர்தல் நிதியளிப்புக்கூட்டங்களுக்கு அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. அனைத்துக் கூட்டங்களிலும் வைகோ கலந்து கொள்கிறார்.
மதிமுக, கடந்த சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அனைத்துத் தொகுதிகளிலும் தோல்விஅடைந்தது. முகால்வாசித் தொகுதிகளில் மதிமுக வேட்பாளர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை.
ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 4 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும்வென்றார் வைகோ.
இந் நிலையில் வரும் சட்டசபைத் தேர்தல் மூலம் மதிமுக பிரதிநிதிகளை சட்டசபைக்குள் அனுப்பியே ஆகவேண்டும் என்று வைகோ சூளுரைத்துள்ளார். இதை நோக்கமாகக் கொண்டு கட்சியினர் தீவிரமாக பாடுபடவேண்டும் என்றும் அவர் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை மையமாகக் கொண்டே தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தி அதில் பங்கேற்க வைகோதீர்மானித்துள்ளார்.
செப்டம்பர் 6ம் தேதி காஞ்சிபுரத்தில் தனது பிரசார பொதுக் கூட்டத்தைத் தொடங்கும் வைகோ, 7ம் தேதிபெரம்பலூர், 8ம் தேதி கோவை, 11ம் தேதி தூத்துக்குடி, விருதுநகர், 13ம் தேதி ஈரோடு, கரூரில் பேசுகிறார்.
செப்டம்பர் 15ம் தேதி சென்னை வரும் அவர் வட சென்னையில் நடைபெறும் பெரியார், அண்ணா பிறந்த நாள்விழா மற்றும் தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
செப்டம்பர் 17ல் திருவள்ளூர், 19ம் தேதி மதுரை, 27ம் தேதி திருநெல்வேலி, 28ம் தேதி திருச்சி, 29ம் தேதிபுதுக்கோட்டை, தஞ்சை, 30ம் தேதி திருவாரூர், நாகை ஆகிய ஊர்களில் பேசுகிறார்.
அக்டோபர் 1ம் தேதி தென் சென்னை, 2ம் தேதி கடலூர், விழுப்புரம், 3ம் தேதி திருவண்ணாமலை, 4ம் தேதிவேலூர், தர்மபுரி, 5ம் தேதி சேலம், நாமக்கல், 6ம் தேதி திண்டுக்கல், தேனி ஆகிய ஊர்களில் பேசுகிறார்.
அக்டோபர் 7ம் தேதி கன்னியாகுமரி, 10ம் தேதி நீலகிரி, 11ம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில்கலந்து கொண்டு பேசுகிறார் வைகோ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications