இட ஒதுக்கீட்டை பாதுகாக்க அரசியல் சட்டத் திருத்தம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு
டெல்லி:
தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வருவது என டெல்லியில்நடந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து எழுந்த எதிர்ப்பால், இட ஒதுக்கீடுபாதுகாக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது.இதனால் உச்ச நீதிமன்றம்-மத்திய அரசு இடையே மோதல் மூண்டுள்ளது. நீதிமன்றங்களையும் தீர்ப்புகளையும் மதிக்காவிட்டால்நீதிமன்றங்களை இழுத்து மூடிவிடுங்கள் என மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி லஹோத்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பின்னணியில் சுய நிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு குறித்து டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வருவது எனவும், இதற்காக ஒரு அரசியல் கமிட்டியை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், எந்தக் கட்சியும் மத்திய அரசும்நீதிமன்றத்தின் கருத்தை விமர்சிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்துக்கு கருத்து தெரிவிக்க முழு உரிமையும் உண்டு என அர்ஜூன்சிங் அக் கூட்டத்தில் தெரிவித்தார்.
கல்வி வியாபாரமாவதைத் தடுக்கவும், சமூக நீதியைப் பாதுகாக்கவும், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ளஉரிமைகளைப் பாதுகாக்கவும் அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகிறது என்றார் சிங்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications