தமிழகத்தை தமிழரே ஆள சட்டம் கொண்டு வர வேண்டும்: சரத்குமார்
திருச்சி:
தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும், தமிழில் படிப்பது அவசியம் என சட்டம் கொண்டு வர வேண்டும்நடிகர் சரத்குமார் கூறினார்.
திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் மத்தியில் பேசிய சரத்குமார், பின்னர்அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.சரத்குமார் பேசுகையில், தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜயகாந்த் என்றில்லை,தனுஷ் கூட கட்சி தொடங்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது.
விஜயகாந்த்துக்கு எனது வாழ்த்துக்கள். செப்டம்பர் 14ம் தேதி அவர் நடத்தப் போகும் மாநாட்டுக்குப்பின்னர்தான் அவரது புதிய கட்சி குறித்த விவரங்கள் தெரிய வரும். என்னைப் பொருத்தவரை எனது இறுதி மூச்சுவரை திமுகவில்தான் இருப்பேன், கட்சியை விட்டு விலக மாட்டேன்.
எனக்கு பிரதமர், முதல்வர் போன்ற பதவிகளில் விருப்பம் இல்லை (அட..). ஆனால் சிலருக்கு அந்த ஆசைஉள்ளது. நான் கடைசி வரை மக்கள் தொண்டனாகவே இருப்பேன். பதவியில் அமர்ந்துதான் எதையும் செய்யவேண்டும் என்பதில்லை.
நான் நிஜ வாழ்வில் புகை பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை. அனைவருக்கும் சொந்த புத்தி உள்ளது. எனவேசினிமாவைப் பார்த்து மக்கள் கெட்டுப் போகிறார்கள் என்று கூறுவது தவறான வாதம். சினிமாவில் பல நல்லவிஷயங்களும் உள்ளன.
அரசியலைப் பொருத்தவரை எனது ரோல் மாடல் கருணாநிதிதான். சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
தமிழகத்தில் யார் தமிழர் என்பதில் பெரும் குழப்பம் உள்ளது. தமிழுக்கு இங்கு முக்கியத்துவம்கொடுக்கப்படுவதில்லை. தமிழர்தான் தமிழகத்தை ஆள வேண்டும், தமிழில் படிப்பது அவசியம் என சட்டம்கொண்டு வர வேண்டும்.
நியூ பட விவகாரம் இந்த அளவுக்குப் போனதற்கு, தணிக்கை குழுவில் உள்ள குறைபாடுகளே காரணம். நாடுமுழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
சென்னையில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காவிட்டால் மும்பைக்குப் போய் சான்றிதழை பெற்று விட முடிகிறது.இந்த நிலை மாறும் வரை நியூ போன்ற படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.
இதேபோல தனியார் தொலைக்காட்சிகளுக்கும் தணிக்கை இருக்க வேண்டும்.
வாங்கிய கடன் தொகையைத் திருப்பித் தர முடியாமல் தயாரிப்பாளர் காஜாமைதீன் தற்கொலைக்கு முயன்றது சுத்தகோழைத்தனம். யாருமே, கடனை வாங்குங்கள் என்று யாரையும் வற்புறுத்துவது இல்லை. நாமாக சென்று கடன்வாங்கி விட்டு பின்னர் அதைத் திருப்பித் தர முடியாமல் தவிப்பதை தவிர்க்க வேண்டும்.
கடன் வாங்கும் முன்பே அதுகுறித்து யோசிக்க வேண்டும். நடிகர் அஜீத் மீதும், பின்னர் இன்னொருவர் மீதும்காஜா மைதீன் புகார் கூறினார். அவர்களது மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை அவர் உணர்ந்திருப்பாரா?பிரச்சினை வந்தால் அதை சந்தித்தே ஆக வேண்டும். மாறாக தப்பிக்க நினைப்பது தவறு என்றார் சரத்குமார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications