சுனாமியால் தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மாபெரும் மாற்றம்
சென்னை:
சுனாமி தாக்குதலுக்குப் பின் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பெரும் அளவில் புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுஅண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில் உறுதியாகியுள்ளது.
சமீப காலமாக தமிழக கடலோரப் பகுதிகளில் அலைகள் மக்கள் வசிக்கும் இடங்கள் வரை பாய்வது வழக்கமாகிவிட்டது.சென்னை, கடலூர் ஆகிய பகுதிகளில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு வாரமாக பீதியுடன் வாழ்ந்துவருகின்றனர்.இதற்கிடையே சுனாமி பாதிப்புக்குப் பின் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கடல் ஆய்வுமையம் விரிவான ஆராய்ச்சியைத் தொடங்கி நடத்தி வருகிறது. கடந்த மே மாதத்தில் தொடங்கிய ஆய்வு அடுத்த மாதம்முடிவடைகிறது.
இந்த ஆய்வறிக்கை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையிடம் சமர்பிக்கப்படவுள்ளது. இந் நிலையில் அலைகளின் உயரம்அதிகமாகியிருப்பது, ஊருக்குள் கடல் புகுவது ஆகியவை குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கடல் ஆய்வு மையத்தின்இயக்குனர் ராமச்சந்திரன் கூறுகையில்,
இப்போது வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டு வரும் கொந்தளிப்பு வழக்கத்துக்கு மாறானது. கடந்த டிசம்பரில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து உருவான சுனாமி ஆகியவற்றால் கடலின் அமைப்பே ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது.
குறிப்பாக கடலோரங்களின் மணல் திட்டுக்களில் பெரும் மாற்றம் நேர்ந்துள்ளது. கரையை ஒட்டி கடலுக்குள் மலைபோலகுவிந்திருந்த மணல் திட்டுக்களும், கற்களும் பெரும் சுனாமி அலைகளால் புரட்டிப் போடப்பட்டுவிட்டன.
பெரும்பாலான திட்டுக்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டன. இந்தத் கல், மணல் திட்டுக்களும் குன்றுகளும்அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிப்பவை. இப்போது இவை கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுவிட்டதால், அந்தப் பகுதிகள் தட்டையாகிவிட்டன.
இதனால் கடல் அலைகள் வழக்கத்தைவிட வேகமாக கரைகளைத் தாக்குகின்றன. குறிப்பாக அமாவாசை,பெளர்ணமியின்போது நிலவின் ஈர்ப்பு சக்தியால் கடலின் மட்டம் அதிகரிக்கும். அலைகளின் உயரமும் அதிகரித்து, வேகமானஅலைகள் கரையைத் தாக்கும்.
சுனாமிக்குப் பின் கடல் திட்டுக்கள் கரைந்துபோனதால் அமாவாசை, பெளர்ணயின்போது அலைகளின் வேகம் பல மடங்குஅதிகரித்துவிட்டது. இதனால் தான் கடல் நீர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்து வருகிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications