சென்னையில் மலைப்பாம்புக்கு நடந்த ஆபரேஷன்
சென்னை:
சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் 10 அடி நீள மலைப் பாம்புக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதன் வயிற்றிலிருந்த கட்டி எடுக்கப்பட்டது.
மகாபலிபுரம் சாலையில் முதலைப் பண்ணை உள்ளது. இங்கு முதலைகள் தவிர மலைப் பாம்புகளும்வளர்க்கப்படுகின்றன. அதில் 3 மலைப் பாம்புகளுக்கு வயிற்றில் கட்டி உருவானது. இதனால் அந்த மலைப்பாம்புகள் உண்ண முடியாமல் அவதிப்பட்டு வந்தன.இதையடுத்து வேப்பேரியில் உள்ள அரசினர் கால் நடை மருத்துவமனை டாக்டர்கள் பாம்புகளைபரிசோதனையிட்டனர்.
அதில் ஒரு பாம்புக்கு வயிற்றில் 1 கிலோ எடையளவுக்கு கட்டி வளர்ந்திருப்பதும், மற்ற 2 பாம்புகளுக்கும் சிறியஅளவில் கட்டி உருவாகியிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து 3 பாம்புகளும் வேப்பேரி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டன.
கட்டி பெரிய அளவில் இருந்த மலைப் பாம்புக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. 10 அடி நீளம் கொண்டஅந்தப் பாம்பு 10 வயது கொண்டதாகும்.
பாம்புக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, மேசையுடன் சேர்த்து கட்டப்பட்டு டாக்டர் அமீர்ஜான்தலைமையிலான மருத்துவர் குழு அறுவைச் சிகிச்சை செய்தது.
சுமார் அரை மணி நேரம் நடந்த அறுவைச் சிகிச்சையில் வயிற்றிலிருந்து கட்டி அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பாம்பு குணமடைந்து வருகிறது. மற்ற 2 பாம்புகளுக்கும் இன்னும் சில நாட்களில் அறுவைச்சிகிச்சை செய்யப்படவுள்ளது.
அறுவைச் சிகிச்சை குறித்து டாக்டர் அமீர்ஜான் கூறுகையில், மலைப் பாம்புகளுக்கு அறுவைச் சிகிச்சை நடப்பதுமிக மிக அபூர்வமானது. எங்களது மருத்துவமனையில் மலைப் பாம்புக்கு அறுவைச் சிகிச்சை செய்வது இதுவேமுதல்முறையாகும்.
ஏற்கனவே நல்ல பாம்பு ஒன்றுக்கு இதேபோல கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தியுள்ளோம்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications