போப்புக்கு அல்-கொய்தா மிரட்டல்: சிட்னி, சிங்கப்பூர், டோக்கியோவை தாக்க வாய்ப்பு
லண்டன்:
கத்தோலிக்கர்களின் புனிதத் தந்தையான போப்பாண்டவர் ஜோசப் பெனடிக்டுக்கு அல்-கொய்தா கொலை மிரட்டல்விடுத்துள்ளது.
வாடிகன் நிர்வாகத்துக்கு பேக்ஸ் மூலம் இந்த மிரட்டல் வந்துள்ளது. அரபி மொழியில் 3 பக்கம் கொண்ட இந்த மிரட்டல் கடிதம்பார்சிலோனாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.அமெரிக்காவுக்கு ஆதரவாக இத்தாலியும் வாடிகனும் செயல்பட்டு வருகின்றன. எனவே விரைவில் உங்களைத் தாக்குவோம்என அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே டோக்கியோ, சிங்கப்பூர், சிட்னி ஆகிய நகர்களைத் தாக்க அல்-கொய்தா திட்டமிட்டு வருவதாக பிரான்ஸ்எச்சரித்துள்ளது.
இதுவரை அமெரிக்கா, ஐரோப்பாவைத் தாக்கி வரும் அல்-கொய்தா, ஆசிய நகர்களையும் தாக்க திட்டமிட்டு வருவதாகத்தெரிகிறது.
இது குறித்து பிரான்ஸ் நாட்டின் தீவிரவாத எதிர்ப்பு நிபுணரும் நீதிபதியுமான ஜீன் லூயிஸ் கூறுகையில்,
டோக்கியோ, சிங்கப்பூர், சிட்னி போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகர்கள் அல்-கொய்தாவின் தாக்குதல்பட்டியலில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நகர்களைத் தாக்குவதன் மூலம், முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தைஏற்படுத்தி, உலக அளவில் பொருளாதாரத்தை சீர்குலைக்க முடியும் என அல்-கொய்தா கருதுகிறது.
குறிப்பாக ஜப்பானைத் தாக்கினால் தெற்காசியா முழுவதும் அதிர்ச்சியைப் பரப்ப முடியும் என அல்-கொய்தா கருதுகிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications