இந்திரா பார்த்தசாரதிக்கு சங்கீத நாடக அகாடமி விருது
டெல்லி:
தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சம் சீதாராமன் உள்ளிட்ட 34 பேருக்கு 2004ம்ஆண்டுக்கான சங்கீதா நாடக அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன,
பல்வேறு கலைகளில் சிறப்பான பங்காற்றும் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் சங்கீத நாடகஅகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. 2004ம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளைப் பெறஇந்திரா பார்த்தசாரதி, மும்பை சகோதரிகள், பிரபஞ்சம் சீதாராமன் உள்பட 34 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 10 பேர் இசைத் துறையைச் சேர்ந்தவர்கள், 7 பேர் நாடகத் துறை, 8 பேர் பரத நாட்டியத் துறை மற்றும்பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
நாடகத் துறையில் ஆற்றிய பணிக்காக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி விருது பெறுகிறார். சங்கீதத் துறைக்காகபிரபஞ்சம் சீதாராமன், திருவெண்காடு ஜெயராமன், மும்பை சகோதரிகள் சரோஜா, லலிதா, மெட்ராஸ் ஏ.கண்ணன்உள்ளிட்டோர் விருது பெறுகின்றனர்.
அகாடமி சார்பில் வழங்கப்படும் அகாடமி ரத்னா விருது பெற நாடகக் கலைஞர் ஸோரா சேகல், கலாமண்டலம்ராமன் குட்டி நாயர், அன்னபூர்ணா தேவி, சந்திரலேகா, தபஸ் சென், வித்யாபாஷினி தேவி ஆகிய 6 பேர்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருதுகளை வழங்கிகெளரவிக்கிறார்.












Click it and Unblock the Notifications