கிருஷ்ணா நதி நீரைப் பெற தமிழக அதிகாரிகள் ஆந்திரா விரைவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு வருவதால் கிருஷ்ணா நதியில் இருந்து நீரைப் பெறுவது குறித்து பேச்சு நடத்த தமிழக அதிகாரிகள் ஆந்திரா சென்றுள்ளனர்.நீரைத் திறந்துவிடுமாறு ஏற்கனவே ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திராவின் சோமசீலா அணையில் நீர் இருப்பை நேரில் பார்வையிட சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் தங்கவேலு, தலைமைப் பொறியாளர் சிவகுமாரன், பொதுப்பணித்துறையின் கிருஷ்ணா திட்டப் பிரிவின் செயற் பொறியாளர் விஜய்குமார் உள்பட 5 மூத்த அதிகாரிகள் ஆந்திரா விரைந்துள்ளனர்.
சோமசீலா அணையையும், நந்தியாலில் கிருஷ்ணா நதியையும் இந்தக் குழு பார்வையிடும். பின்னர் ஆந்திர அதிகாரிகளுடன் இக் குழு பேச்சு நடத்தவுள்ளது.












Click it and Unblock the Notifications