ஐஐடியில் இட ஒதுக்கீடு, திருக்குறளுக்கு தேசிய நூல் அந்தஸ்து: திமுக கோரிக்கை
வேலூர்:
திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வேலூரில் நடைபெறும் திமுக மண்டல மாநாட்டில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர் பெருமுகை பகுதியில் திமுக மண்டல மாநாடு சனிக்கிழமை காலை கட்சிக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின்னர் பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசத் தொடங்கினர். மாலையில் 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தீர்மான விவரங்கள்:
திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாடும், வளம் நிறைந்த செம்மொழியான தமிழைமத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும்.
நம்மை கூட்டாட்சி நாடு என்று சொல்லிக் கொண்டாலும் மாநில அரசுகளுக்கு போதிய சுதந்திரம் வழங்கப்படவில்லை. எல்லாஅதிகாரமும் மத்திய அரசிடமே குவிந்து கிடக்கிறது.
பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்க மாநிலங்களுக்குமுழுமையான சுயாட்சி வழங்குவது மிக மிக அவசியம். இதனால் முழுமையான, உண்மையான கூட்டாட்சியை கொண்டுவரத்தேவையான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். மாநில சுயாட்சிக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்.
வேலை நிறுத்த உரிமையை அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே இடம் பெறச் செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
போலி வாக்காளர் விண்ணப்பங்களைக் கொடுத்தவர்கள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் சட்டத் திருத்தத்தை முதலில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சுய நிதிக் கல்லூரிகளில் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
ஐஐடி போன்ற தொழில்நுட்பக் கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி ஒடுக்கப்பட்ட இனங்ளைச் சேர்ந்தமாணவர்கள் பலனடையச் செய்ய வேண்டும்.
அதே போல சிறுபான்மையினருக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் தனி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
டெல்லி-சென்னை இடையே சரக்கு ரயில்களை இயக்க தனி ரயில் பாதை அமைக்க வேண்டும்.
தென் மாநிலங்களில் உள்ள நதிகளை இணைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை விரைந்து வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை கொடுக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் சேமித்து வைக்க கேரள அரசிடமிருந்து மத்திய நீர் வள ஆணையம்அனுமதி பெற்றுத் தர வேண்டும்.
சென்வாட் வரியை ரத்து செய்தது, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியது, தமிழை செம்மொழியாக அறிவித்ததுஆகியவற்றுக்காக மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்று இரண்டாவது நாள் மாநாட்டில் காலையில் துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் பேசுகிறார். மாலையில் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் பேசுகின்றனர். இரவில் கருணாநிதி மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications