நளினி விவகாரம்: ப.சிதம்பரம் ராஜினாமா கோரி ராஜ்யசபாவில் பாஜக-அதிமுக அமளி
டெல்லி:
நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், வருமான வரித்துறை தொடர்பான வழக்குகளில்ஆஜரானது தொடர்பான விவகாரம் மாநிலங்களவையில் இன்று பெரும் அமளியை ஏற்படுத்தியது.
அதிமுகவும் பாஜகவும் இணைந்து இந்த விவகாரத்தை இன்று மாநிலங்களவையில் கிளப்பின. இதனால் ஏற்பட்டஅமளியைத் தொடர்ந்து அவை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.சிதம்பரத்தின் மனைவி நளினி, சென்னை வருமான வரித்துறை தொடர்பான சில வழக்குகளில் ஆஜரானவிவகாரத்தை அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவையில் கிளப்பியது. இந்தப் பிரச்சினையில் தற்போதுபாஜகவும் சேர்ந்து கொண்டுள்ளது.
இதன்மூலம் இதுவரை மறைமுகமாக இருந்து வந்த அதிமுக-பாஜக உறவு இன்று வெட்ட வெளிச்சமானது.
இன்று காலை மாநிலங்களவையில் இப்பிரச்சினையை பாஜகவைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்ஹாஆகியோர் எழுப்பினர். அவர்கள் பேசுகையில், அவையின் கூட்டம் நடக்கும்போது இந்த விவகாரம் தொடர்பாகஅமைச்சர் இங்கு தான் விளக்கம் தர வேண்டும். அதை விட்டுவிட்டு தனது துறை மூலம் அறிக்கை வெளியிடக்கூடாது என்றனர்.
ஆனால், உரிய நோட்டீஸ் கொடுக்காமல் இந்தப் பிரச்சனையை கிளப்பியதால், இதற்கு மாநிலங்களவைத்தலைவர் பைரான் சிங் ஷெகாவத் அனுமதி மறுத்தார்.
ஆனால் தொடர்ந்து பேசிய சுவராஜும் சின்ஹாவும், ப.சிதம்பரம் உடனடியாக அவைக்கு வந்து விளக்கம் தரவேண்டும் என்றனர்.
அவருக்கு ஆதரவாக அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
இதை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. இதன்காரணமாக பிற்பகல் வரை அவையை ஒத்திவைப்பதாக ஷெகாவத் அறிவித்து வெளியேறினார்.
மீண்டும் அவை கூடியபோதும் இதே விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்டதால் மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
சிதம்பரம் மீண்டும் விளக்கம்:
இதையடுத்து மாநிலங்களவைக்கு வந்த சிதம்பரம் விளக்கம் தந்தார். அவர் கூறுகையில்,
எனது மனைவியை வருமான வரித்துறையின் நேரடி வரி விதிப்பு வாரியம் தான் வழக்கறிஞராக நியமித்தது. இந்த விஷயமே என் கவனத்துக்குவரவில்லை. வந்திருந்தால் அதை ஆரம்பத்திலேயே தடுத்தி நிறுத்தியிருப்பேன். நளினியை வழக்கறிஞராக நியமித்ததற்ரகாக நேரடி வரி விதிப்பு வாரியம்வருத்தம் தெரிவித்துள்ளது.
நளினியை வாரியம் வழக்கறிஞராக நியமித்தது, அவையில் பிரச்சனை கிளப்பப்பட்ட பின்னரே எனக்குத் தெரியும். இதற்காக நானும் கூட வருத்தம்தெரிவித்துவிட்டேன் என்றார்.
ஆனால், சிதம்பரத்தின் விளக்கத்தை ஏற்காத அதிமுக உறுப்பினர்கள் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அவையின் மையப்பகுதியில் கூடிய அதிமுக எம்பிக்கள் சிதம்பரத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதற்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் மீண்டும்அவையில் அமளி ஏற்பட்டது.
இதனால் அவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications