ஐடியலின் இன்னொரு மோசடி: கடலை வியாபாரி புகார்
சென்னை:
ரூ. 50 லட்சம் கடன் தருவதாக கூறி தன்னிடம் ரூ. 1.85 லட்சம் மோசடி செய்து விட்டதாக ஐடியல் சுப்ரமணியம்மீது கும்பகோணத்தைச் சேர்ந்த கடலை வியாபாரி ஒருவர் புகார் கூறியுள்ளார்.
மோசடி மன்னன் ஐடியல் சுப்ரமணியம் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுவரை மொத்தம்22 புகார்கள் குவிந்துள்ளன. இதில் 5 புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில் ஐடியல் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த ஐந்து வழக்குகளும் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் போட்டது.இது தவிர திண்டுக்கல் நீதிமன்றத்தில் 7 வழக்குகளும், நாகர்கோவில், காஞ்சிபுரம் போலீஸார் தலா ஒரு வழக்கும்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் 8 பேர் தனியாக புகார் கொடுத்துள்ளன.இவை அனைத்துமே நிலுவையில் உள்ளன
இந் நிலையில் ஐடியல் மீது கடலை வியாபாரி ஒருவர் பரபரப்பு புகாரை சுமத்தியுள்ளார்.
கும்பகோணத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் சென்னை காவல்துறை ஆணையர் நடராஜை சந்தித்து ஒருமனுவைக் கொடுத்தார்.
அதில், நான் கும்பகோணத்தில் நிலக்கடலை மொதத் வியாபாரம் செய்து வருகிறேன். ஆலை ஒன்றும்வைத்துள்ளேன். இந்த ஆலையை நவீனப்படுத்துவதற்காக கடன் வாங்க முடிவு செய்தேன்.
அப்போது கோவையைச் சேர்ந்த ராஜா என்பவர் எனக்கு ஐடியல் சுப்ரமணியத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். 75பைசா வட்டிக்கு ரூ. 50 லட்சம் கடன் வாங்கித் தருவதாக ஐடியல் கூறினார்.
இதை நம்பிய நான், அதற்குரிய கமிஷனாக ரூ. 1.85 லட்சம் பணத்தை ஐடியலிடம் கொடுத்தேன்.
ஆனால் கூறியபடி அவர் கடன் வாங்கித் தரவில்லை. இதையடுத்து கடந்த முறை அவரைப் பார்க்கச் சென்றேன்.அப்போது விபத்தில் சிக்கிவிட்டேன். அதில் எனது கால் சேதமடைந்துவிட்டது.
பின்னர் ஐடியலை சந்தித்தபோது அடியாட்களை வைத்து அவர் என்னை மிரட்டினார். தற்போது அவரைப்போலீஸார் கைது செய்து விட்டதை அறிந்து ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்பரமசிவம்.
இதற்கிடையே திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைந்த ஐடியலின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவரான முகி என்றமுத்துக்கிருஷ்ணன் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications