நீதிபதிகள் முன்பு மகளை இழுத்து சென்ற தந்தை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காதல் திருமணம் செய்து கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான தனது மகளை நீதிபதியின்முன்பாகவே அவரது தந்தை இழுத்துச் சென்றதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை துறைமுகம் ஊழியர் குடியிருப்பில் வசித்து வருபவர் மணிவேலன். இவர் துறைமுக மருத்துவமனையில்டாக்டராக பணியாற்றி வருகிறார். இதே மருத்துவமனையில் டாக்டராக இருந்தவர் சாய்லட்சுமி. இருவரும்காதலித்தனர்.

கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி யாருக்கும் தெரியாமல் மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பின்னர் சாய்லட்சுமி, மணிவேலனின் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து சாய்லட்சுமியின் பெற்றோர் கடந்த 4ம் தேதி, மணிவேலனின் வீட்டுக்குச் சென்று தங்களது மகளைஅடித்து உதைத்து தங்களது வீட்டுக்கு இழுத்துச் சென்றனர்.

இதையடுத்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் மணிவேலன். இந்த மனு மீது போலீஸார்எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசாருக்கு சாய்லட்சுமியின் தந்தை தரப்பு பணம் தந்துவிட்டதேஇதற்குக் காரணம்.

இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார் மணிவேலன்.

இந்த மனு நீதிபதிகள் பி.டி.தினகரன், கிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சாய்லட்சுமியைபோலீஸார் நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தினர்.

மணிவேலன் தனது தந்தையுடன் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

அப்போது ரகசியமாக திருமணம் செய்து கொண்டதால், 2 வருடம் கழித்து இருவருக்கும் தானே கல்யாணம்செய்து வைப்பதாக சாய்லட்சுமியின் தந்தை ராதாகிருஷ்ணன் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

அதற்கு, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று சாய்லட்சுமியிடம் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, இப்போதுபெற்றோருடன் செல்வதாகவும், அவர்கள் கூறியபடி திருமணம் செய்து வைத்த பின்னர் கணவருடன் சேர்ந்துவாழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சாய்லட்சுமி சாட்சிக்கூண்டிலிருந்து கீழே இறங்கினார்.

அப்போது அவரது தந்தை ராதாகிருஷ்ணன், சாய்லட்சுமியை வேக, வேகமாக கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார்.

இதைப் பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, ராதாகிருஷ்ணனின் நடத்தை சந்தேகம் அளிப்பதாகக் கூறிய நீதிபதிகள், 2 வருடம் கழித்துதிருமணம் செய்து தருவதாக அவர் கூறியதை பிரமாணப் பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்என்று உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+