சன் டிவியின் புறக்கணிப்பு: கருணாநிதியிடம் வைகோ குமுறல்!
சென்னை:
தான் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும், பேச்சுக்களையும் சன் டிவி தொடர்ந்து புறக்கணித்து வருவது குறித்து திமுகதலைவர் கருணாநிதியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்து வருத்தம்தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
திமுக கூட்டணிக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி கிடைக்க முக்கியக் காரணங்களில் ஒன்றாகஇருந்தவர் வைகோ. பொடா சட்டத்தின் கீழ் வைகோ ஒரு வருடத்திற்கும் மேல் சிறையில்அடைக்கப்பட்டிருந்தார்.ஜெயலலிதாவுக்கு எதிரான முதன்மையான அஸ்திரமாக வைகோவைத் தான் திமுக பயன்படுத்தியது. திமுககூட்டணியின் பிரசாரத்திற்கு வலுவூட்டும் விதமாக வைகோ ஜாமீனில் வெளியே வர சம்மதித்தார்.
ஜாமீனில் வெளியே வந்த பின் திமுக கூட்டணிக்காக ஊர் ஊராக சென்று தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்வைகோ. அப்போதெல்லாம் வைகோ குறித்து செய்திகளை தவறாமல் வெளியிட்டது சன் டிவி.
ஆனால், தேர்தலுக்குப் பிறகு வைகோவை திமுக கண்டுகொள்ளவில்லை. மேலும், சன் டிவியிலும் வைகோமுற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
அதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது, திமுக நடத்தி வரும் மண்டல மாநாடுகளில் வைகோவின் பேச்சுக்குதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதுதான்.
வைகோவின் நிகழ்ச்சிகள், பேச்சுக்கள் எதுவும் சன் டிவியில் ஒளிபரப்பாவதில்லை. வைகோவின் முகத்தைக் கூடகூட்டத்தோடு கூட்டமாக சில நொடிகளே காட்டுகிறார்கள். இது வைகோ மற்றும் மதிமுகவினரிடையே பெரும்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாகவே வைகோ தமிழகம் முழுவதும் மேற்கொண்ட நடைப்பயணம், அப்போது அவர் பேசியகூட்டங்கள் ஆகியவற்றைத் தொகுத்து விஜய் டிவியில் வாரந்தோறும் ஒளிபரப்பியது மதிமுக.
அக்கட்சிக்கு ஆரம்பம் முதல் பல்வேறு வகைகளில் உறுதுணையாக இருந்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்கலைப்புலி தாணு தான் விஜய் டிவியில் நடைபயண நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஏற்பாடு செய்தார்.
இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் வேலூரில் நடந்த திமுக மண்டல மாநாட்டில் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பேசினர். அவர்களது பேச்சுக்களை சன் டிவி தனது செய்தியின்போதுஒளிபரப்பியது.
ஆனால் வைகோவின் பேச்சை மட்டும் காட்டவில்லை. இது வைகோவுக்கு பெரும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதுவரை இந்த விஷயத்தில் பொறுமை காத்து வந்த வைகோ, வேலூர் திமுக மாநாட்டு விஷயத்திலும் தன்னைசன் டிவி புறக்கணித்ததை பொறுக்க முடியாமல் தனக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் விவாதித்ததாகத்தெரிகிறது.
இந் நிலையில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு வைகோ சென்றார்.
அங்கு கருணாநதியுடன் அவர் சுமார் ஒரு மணி நேரம் பேசினார். இந்த சந்திப்பின்போது தான் எழுதிய சிறையில்விரிந்த மடல்கள் நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பை கருணாநிதியிடம் கொடுத்த வைகோ, சன் டிவியின்தன்னைப் புறக்கணிப்பு குறித்து கருணாநிதியிடம் மனம் விட்டுப் பேசியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தன்னையும், தனது பேச்சையும் சன் டிவி புறக்கணித்து வருவதற்கான காரணம் புரியவில்லை என்றும்இது தனக்கும் தனது தொண்டர்களுக்கும் பெரும் மன வருத்தத்தைக் கொடுப்பதாகவும் கருணாநிதியிடம் வைகோகூறியதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications