தொகுதிகளை ரத்து செய்ய எதிர்ப்பு: பிரதமரிடம் நாடார் சமூகத்தினர் மனு

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி:

நாடார் சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் சாத்தான்குளம், சேரன்மாதேவி, பத்மநாபபுரம் ஆகிய சட்டசபைத் தொகுதிகளை ரத்தசெய்யக் கூடாது என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம், நாடார் சமுதாயப் பிரதிநிதிகள் மனு கொடுத்தனர்.

தொகுதி மறுசீரமைப்பின் கீழ் தமிழகத்தில் பல தொகுதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சாத்தான்குளம், சேரன்மாதேவி,பத்மநாபபுரம் ஆகியவையும் அடங்கும். இந்தத் தொகுதிகளை ரத்த செய்யும் முடிவுக்கு நாடார் சமுதாயத்தினர் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.

தங்களது வலிமையைக் குறைக்கும் செயல் இது என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்தத் தொகுதிகளை ரத்து செய்யக்கூடாது என்று கோரி அவர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்காக தொகுதி சீரமைப்பு மறுப்பு போராட்டஇயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்த இயக்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், காங்கிரஸ் எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் டெல்லி சென்று பிரதமர்மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், நாடார் சமுதாயத்தினருக்கு சமூக ரீதியில் பாதிப்பைஏற்படுத்தும் தொகுதிகள் ரத்து முடிவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடார்களின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்று கோரப்பட்டிருந்தது.

கிராமப்புற மக்கள் இந்த தொகுதி ரத்து முடிவால் அதிகம் பாதிக்கப்படுவர். எனவே கிராமப்புற மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை அமல்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை மனுவில் தெரிவித்திருந்தனர்.

நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியையும் இக்குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+