மின் கம்பி அறுந்தது: சென்னையில் ரயில் பயணிகள் தவிப்பு!
சென்னை:
அரக்கோணம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்தததால், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் அனைத்தும்மிகவும் தாமதமாக கிளம்பியது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கள்ளாகினர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே திருவேலங்காடு என்ற இடத்தில் ரயில் பாதையில் மின் கம்பி அறுந்து விழுந்தது. இரவு8 மணியளவில் இது நடந்தது. இதையடுத்து அந்த ரயில் பாதையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, சிக்னல்கள் செயலிழந்தன.இதையடுத்து இப்பாதை வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்ப வேண்டிய ரயில்களும் நிறுத்தப்பட்டன. சுமார் 1 மணி நேரம் தாமதமாகஅனைத்து ரயில்களும் கிளம்பும் என அறிவிக்கப்பட்டது. இதனால் குழந்தைகள், பெண்கள் என ஆயிரக்கணக்கான பயணிகள்ரயில் நிலையத்திலேயே முடங்க வேண்டியதாயிற்று.
ரயில்கள் கிளம்புவது மிகவும் தாமதமாகியதால் பயணிகள் பலர் அதிருப்தியடைந்து ரயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டுமுறையிட்டனர். ஆனால் மின் தடை எப்போது சரியாகும் என்பது குறித்து அதிகாரிகளால் பயணிகளுக்கு உறுதி தரமுடியவில்லை. இந்த மின் தடை காரணமாக அனைத்து ரயில்களும் 1 முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக கிளம்பிச் சென்றன.
இந்த மின் தடை காரணமாக சென்னை சென்டிரல் ரயில் நிலையம் மட்டுமல்லாது, வேலூர், காட்பாடி, அரக்கோணம் ரயில்நிலையங்களிலும் அதிக அளவில் பயணிகள் அவதிப்பட்டனர். அறுந்து போன மின் கம்பி அகற்றப்பட்டு மீண்டும் மின்இணைப்பு கொடுக்கப்பட்ட பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் ரயில்கள் ஓடத் தொடங்கின.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications