சேது சமுத்திரத் திட்டம்: ஜெ. புகாருக்கு இ.கம்யூ மறுப்பு
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்துள்ளது என்றுஇந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான முதல்வர் ஜெயலலிதாவின் புகார் குறித்து தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,சேது சமுத்திரத் திட்டத்தினால் மீனவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தற்போது முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். இதுநியாயமற்றது.காரணம், கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், இதுகுறித்து அதிமுகதெளிவாக கூறியுள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற தீவிரமாக பாடுபடுவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில்கூறப்பட்டுள்ளது. மேலும், சேது சமுத்திரத் திட்டத்தின் பலன்கள் குறித்தும் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது அப்படி கூறி விட்டு இப்போது சேது சமுத்திரத் திட்டத்தை ஜெயலலிதா தீவிரமாக எதிர்ப்பது நியாயமற்றது.உண்மையிலேயே அவருக்கு மக்கள் நலன் மீது அக்கறை இருந்திருக்குமானால், அதற்கேற்ற நிவாரணத்தை மத்தியஅரசிடமிருந்து கோரியிருக்கலாம்.
இத்திட்டத் தொடக்க விழாவின்போது, மீனவர் மறுவாழ்வுக்காக ரூ. 250 கோடி ஒதுக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் மிகத்தெளிவாக கூறியுள்ளதை ஜெயலலிதா வசதியாக மறந்து விட்டார். எனவே இப்போதைய நிலையில் இத்திட்டத்தை நிறுத்தவேண்டும் என ஜெயலலிதா கூறுவது புத்திசாலித்தனமான கோரிக்கை அல்ல என்றார் பாண்டியன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications