விமான நிலைய ஊழியர்களின் அலட்சியம்: மத்திய அமைச்சர் கொந்தளிப்பு!
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் தான் அவமரியாதையாக நடத்தப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் இ.அகமது, விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேலிடம் புகார் கொடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் அகமது, மலேசியா செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையம்வந்துள்ளார். முக்கியப் பிரமுகர்கள் ஓய்வெடுக்கும் அறையில் தங்குவதற்காக அங்கு சென்றார். ஆனால் அறையைத் திறக்கவிமான நிலைய ஊழியர்கள் தாமதம் செய்ததாக தெரிகிறது.அமைச்சரை அடையாளம் தெரியாத காரணத்தால் அவரை சரிவர ஊழியர்கள் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.அறைக்குள் செல்ல முடியாமல் நீண்ட நேரமாக வெளியிலேயே காத்திருந்த அகமது, கோபமாகி, மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இயக்குநருக்குப் போன் செய்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலைய முதுநிலை மேலாளர் ஸ்ரீவத்சவா அங்கு விரைந்து வந்துள்ளார். ஊழியர்கள் செயலுக்காகவருத்தம் தெரிவிப்பதாக கூறிய ஸ்ரீவத்சவா, முக்கியப் பிரமுகர்கள் தங்கும் அறையைத் திறந்து விட்டு அங்கு அமைச்சரைதங்கும்படி கூறியுள்ளார்.
ஆனால் கோபம் குறையாத அகமது, தான் அங்கு தங்கப் போவதில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதுதொடர்பாகவிமானப் போக்குவரத்து அமைச்சரிடம் அவர் புகார் செய்துள்ளதாக தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications