234 தொகுதியிலும் போட்டியிடுவோம்: பாஜக
ஊட்டி:
தமிழகத்தில் வருகிற சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஊட்டியில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நீலகிரியில் விளையும் பசும்தேயில்லைக்கு, கிலோவுக்கு ரூ. 10 விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதை வலியுறுத்தியே இந்தப் போராட்டம். இதுநடக்காவிட்டால் நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்துவோம்.தேயிலை வாரியத்திற்கு உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும். அரசியல் காரணங்களால் இந்த நியமனம் தாமதமாகிறது.இதனால்தான் பசும் தேயிலைக்கு உரிய விலையை நிர்ணயம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபடும் ரவுடிகள், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் மீது காவல்துறை தீவிர நடவடிக்கைஎடுத்து வருவது பாராட்டுக்குரியது. சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக உள்ளது. அமைதிப் பூங்காவாக திகழ்கிறது தமிழகம்.ஆந்திராவையும், மற்ற பிற மாநிலங்களையும் உலுக்கி வரும் நக்சலைட்டுகளால் தமிழகத்தில் தலையெடுக்க முடியாமல்போனதற்குக் காரணம் காவல்துறையின் சிறப்பான கண்காணிப்பே.
முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசு விழாக்களைப் புறக்கணிப்பதாக கூற முடியாது. அவருக்கு உண்டான மரியாதையைகொடுத்தால் நிச்சயம் அவர் கலந்து கொள்வார். கட்சி விழா போல நடத்தினால் அவர் எப்படி கலந்து கொள்வார்?
சட்டசபைத் தேர்தலில் பாஜக தனித்தே 234 தொகுதிகளிலும் போட்டியிடும். யாருடைய ஆதரவையும் பாஜக கோராது. இனிமேல்தமிழகத்திலும் கூட்டணி ஆட்சியே ஏற்படும். அதைத் தவிர்க்க முடியாது என்றார் ராதாகிருஷ்ணன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications