குடும்பத்தை கேலி செய்வது குறித்துக் கவலையில்லை: கருணாநிதி
சென்னை:
எனது குடும்பத்தினர் அரசியலில் ஈடுபடுவதை கேலி செய்து பேசுபவர்கள் குறித்து நான் கவலைப்பட்டதே இல்லை என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருணாநிதியின் மைத்துனர் தட்சிணாமூர்த்தியின் பேரன் சிட்டிபாபு திருமணம் சென்னையில் கருணாநிதி தலைமையில் நடந்தது.இந்த விழாவில் கருணாநிதி பேசுகையில், தட்சிணாமூர்த்தி குடும்பத்துக்கும், எனக்கும் மிக நீண்ட கால உறவு உள்ளது. 1948ம்ஆண்டு எனக்கும், தட்சிணாமூர்த்தி குடும்பத்துக்கும் சம்பந்தம் ஏற்பட்டது.அவர்களது குடும்பத்திலிருந்து 1938ம் ஆண்டு ஒரு மூதாட்டி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். அவர்வேறு யாருமல்ல, ஸ்டாலின், அழகிரி, தமிழரசு ஆகியோரின் கொள்ளுப்பாட்டி ராஜாமணிதான் அவர். சென்னை சிறையில் 6மாதம் அடைக்கப்பட்டிருந்தார்.
இப்படி, வழி வழியாக திராவிடக் கொள்கையில் ஊறியது எங்களது குடும்பங்கள். இன்று எங்களது குடும்பங்கள் குறித்து சிலர்கேலி பேசுகிறார்கள். பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை அரசியலில் ஈடுபடுத்துவதாக வசை பாடுகிறார்கள். அவர்களுக்கு ஒன்றுமட்டும் சொல்கிறேன். இவர்கள் அல்ல, இவர்களின் கொள்ளுப் பாட்டியே மொழிப் போரில் ஈடுபட்டவர்கள். அப்போதெல்லாம்நீங்கள் பிறந்தே இருந்திருக்க மாட்டீர்கள், ஏன் கருத்தரித்துக் கூட இருக்க மாட்டீர்கள்.
எனது மைத்துனர் எனது வீட்டுக்கு வருவார். வந்தால், தொண்டர்களோடு, தொண்டராக அமர்ந்திருப்பார். அவர் எனதுமைத்துனர் என்று தொண்டர்களுக்கே தெரியாது. எனது மனைவி வந்து சொன்னால்தான் எனக்கே அவர் வந்திருப்பது தெரியும்.அப்படிப்பட்டது எங்களது உறவுமுறை. ஆனால் மனதளவில் நிறைய நேசிப்பவன் என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications