சென்னைக்கு கிருஷ்ணா நீர் எப்போது?
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
சென்னை நகருக்கு இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து கிருஷ்ணா நீர் திறந்து விடப்படும் என ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர்லட்சுமய்யா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சோமசீலா ஏரி இன்னும் நிரம்பவில்லை. இன்னும் 15 நாட்களில் அணைநிரம்பலாம். அதில் 24 டிஎம்சி நீர் தேக்கப்பட்டவுடன் அணை திறக்கப்படும்.
அந்த அணையிலிருந்து வெளியேறும் நீர் கண்டலேறு அணைக்குச் செல்லும். அந்த அணையும் நிரம்பியவுடன், சென்னைக்கு தண்ணீர்திறந்து விடப்படும். எனவே இன்னும் 2 வாரங்கள் கழித்து கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு விடப்படும் என்றார் லட்சுமய்யா.












Click it and Unblock the Notifications