புழுங்கிக் கொண்டிருக்கிறார் சசிகலா: நடராஜன் உருக்கம்!
திருநெல்வேலி:
எனது மனைவி சசிகலா, அனலின் வெப்பத்தில் புழுங்கிக் கொண்டிருக்கிறார் என்று நடராஜன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நெல்கட்டும் சேவல் கிராமத்தில் நடந்த பூலித் தேவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டுநடராஜன் பேசுகையில்,ஜெயலலிதாவின் தோழியாக அவருடனேயே இருந்து கொண்டிருக்கும் சசிகலா, அனலின் வெப்பத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறார், புழுக்கத்தில் அவதிப்பட்டு வருகிறார். அவரிடமிருந்து சந்தோஷம் போய் ரொம்ப நாட்களாகிறது.எல்லோருக்கும் சசிகலா சந்தோஷமாக இருப்பது போலத் தெரியும். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. அவர் நெருப்பின்தகிப்பில் அவஸ்தைப்பட்டு வருகிறார்.
இந்தியாவில் உள்ள எந்த அரசியல் தலைவருக்கும் நான் இளைத்தவன் இல்லை. எல்லோரையும் விட சிறப்பாக அரசியல் புரியத்தெரியும். எனது மாஜித் தலைவரான கருணாநிதி என்ன திட்டம் போட்டாலும் அதைத் தவிடுபொடியாக்கி விடுவேன். அதுஅவருக்கும் தெரியும்.
எல்லார் மீதும் வழக்கு போட்டாச்சு, நான் மட்டும்தான் பாக்கி என்று நினைத்துத்தான் என் மீது வெளிநாட்டுக் கார் இறக்குமதிதொடர்பான வழக்கைப் போட்டார் கருணாநிதி. அதை நான் சட்டப்படி சந்திப்பேன், ஓடி ஒளிய மாட்டேன்.
இங்கே நடிகர்கள் நிறையப் பேர் வந்திருப்பதை பலரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். தேவர் இனத்தவர் என்பதால் மட்டும்இவர்களை நான் கூட்டி வரவில்லை. இவர்கள் எல்லோரும் சேர்ந்து பூலித்தேவர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்நடிக்கவுள்ளனர். அடுத்த ஆண்டு கார்த்திக், பிரபு ஆகியோரையும் கூட்டி வருவேன்.
நியூ படம் ரொம்ப ஆபாசமாக இருப்பதாக கூறி அவரைக் கைது செய்து வழக்குப் போட்டுள்ளனர். கஜூராஹோவில் இல்லாததைவிடவா நியூ படத்தில் ஆபாசம் நிறைந்துள்ளது? சூர்யா என்னிடம் வந்திருந்தால், என்னிடம் முறையிட்டிருந்தால் அவர்கைதாகியிருக்க மாட்டார். இப்போது இயக்குநர் மனோஜ் குமார், சூர்யாவிடம் பேசியுள்ளார். அவரை என்னிடம் அழைத்துவருவதாக கூறியுள்ளார். இனிமேல் அவருக்குப் பிரச்சினை இருக்காது.
எங்களை ஜாதி முத்திரை குத்திப் பார்க்காதீர்கள். பொதுவாக நான் இதுபோன்ற ஜாதி சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. காரணம், நம் மக்கள் விவேகமாக நடந்து கொள்வதில்லை. ஆனால் இன்று கலந்து கொண்டிருக்கிறேன். இந்தசூழ்நிலை தொடர வேண்டும்.
நடிகர் கார்த்திக்கை நான் ரகசியமாக சந்தித்ததாக கூறினார்கள். உண்மையில் நான் கார்த்திக்கை சந்திக்கவில்லை. அவர்ரொம்பவும் நல்லவர், சமுதாயப் பணியில் அவருக்கு ஆர்வம் வந்துள்ளது. அதைப் பாராட்டுகிறேன். மதுரையில் நடந்தவிழாவின்போது இளைஞர்கள் சிலர் மோதலில் ஈடுபட்டது எனக்கு வருத்தம் தந்தது என்று பேசினார் நடராஜன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications