திமுக மீது திண்டிவனம் ராமமூர்த்தி திடீர் பாய்ச்சல்!
விழுப்புரம்:
சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் திமுகவின் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாக தமிழக முன்னால்காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பாக விழுப்புரத்தில் ஓராண்டு மத்திய அரசின் சாதனைகள் விளக்கக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய திண்டிவனம் ராமமூர்த்தியின் திமுகவையும், திமுகவைச் சேர்ந்த மத்தியஅமைச்சர்களையும் மறைமுகமாக சாடினார்.இந்தக் கூட்டத்தில் திண்டிவனம் ராமமூர்த்தி பேசுகையில், தியாகங்கள் செய்தே தேய்ந்து போன கட்சி காங்கிரஸ். கூட்டணிதர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே பல தியாகங்களை செய்துள்ளது காங்கிரஸ்.
கடந்த 1996ம் ஆண்டு வரை தமிழகத்தின் வட மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி நல்ல பலத்துடன்தான் இருந்தது. ஆனால் அதன்பிறகு இந்த மாவட்டங்கள் காங்கிரஸ் கட்சியின் கையை விட்டுப் போய் விட்டன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட மாவட்டங்களிலும், புதுவையிலும் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தில் கூட போட்டியிடமுடியவில்லை. கூட்டணி தர்மம் என்ற பெயரில் இவற்றை நாம் தாரை வார்த்து விட்டோம்.
சேது சமுத்திரத் திட்டம் காங்கிரஸ் அரசின் நடவடிக்கை காரணமாக அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இதன் தொடக்க விழாவில்,சேது சமுத்திரத் திட்டத்திற்காக அரும்பாடு பட்ட முன்னாள் நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கோசல்ராமை யாராவது நினைவுகூர்ந்தார்களா? அவரை மறந்து விட்டனர். விழாவுக்கு ஏற்பாடு செய்த மத்திய அமைச்சர் கூட (டி.ஆர்.பாலு) கோசல்ராம் குறித்துஒரு வார்த்தை கூட கூறவில்லை. நல்லவேளை, வைகோ, கோசல்ராமை மறக்காமல் குறிப்பிட்டுப் பேசினார்.
அதேபோலத்தான், நல்ல துறைகளையும் கூட காங்கிரஸ் எம்.பிக்களால் பெற்று அமைச்சராக முடியாமல் போய் விட்டது. மத்தியதொலைத் தொடர்புத் துறையை ராஜீவ் காந்திதான் நவீனப்படுத்தினார். அதற்குப் புத்துயிர் ஊட்டினார். ஆனால் அந்தத்துறையைக் கூட காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை. கூட்டணிக் கட்சிக்கு (திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன்) அத்துறைபோய் விட்டது. இதையும் தியாகம் என்றுதான் கூற வேண்டும்.
இதை விடக் கொடுமை, போபர்ஸ் ஊழல் விவகாரம் தொடர்பாக ராஜீவ் காந்தி மீது சரமாரியாக குற்றம் சாட்டியவர்கள்தான்(திமுக) இன்று நமது கூட்டணியில் முதன்மையாக உள்ளனர். ராஜீவ் காந்தி ஊழல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியபிறகும் அதை நாம் கொண்டாடவில்லை. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலையை சந்தோஷமாக கொண்டாடியவர்கள் இன்றுநமது கூட்டணியில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி செய்துள்ள இத்தகைய தியாகங்களை கூட்டணிக் கட்சிகள் மதிக்க வேண்டும். கூட்டணியில் காங்கிரஸின் இடம்என்ன, அதற்குரிய மரியாதை என்ன என்பதை இக்கட்சிகள் விளக்க வேண்டும் என்றார் தி ண்டிவனம் ராமமூர்த்தி.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன், விநாயகமூர்த்தி ஆகியோரைத் தொடர்ந்து திமுகவை மறைமுகமாககடுமையாக விமர்சித்துள்ளார் திண்டிவனம் ராமமூர்த்தி. இதனால் காங்கிரஸ், திமுக இடையே மீண்டும் பூசல் மூளும் என்றபரபரப்பு எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications