செல்போன் எறிந்த வழக்கு: கோர்ட்டில் எஸ்.ஜே. சூர்யா ஆஜர்
சென்னை:
திரைப்படத் தணிக்கைக் குழு பெண் உறுப்பினர் வானதி சீனிவாசன் மீது செல்போனை எறிந்தது தொடர்பாக வழக்கில் இன்றுவிசாரணை தொடங்கியது. இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நேரில் ஆஜரானார்.
நியூ படத்தில் கிரண் நடித்த பாடலை சேர்க்குமாறு தணிக்கைக் குழுவை அணுகினார் சூர்யா. ஆனால் பாடல் மிகவும் ஆபாசமாகஇருப்பதாக கூறிய தணிக்கைக் குழு பெண் உறுப்பினர் வானதி சீனிவாசன் அப்பாடலை அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டார்.இதனால் கோபமடைந்த சூர்யா, கையில் இருந்த செல்போனைத் தூக்கி வானதி சீனிவாசன் மீது எறிந்தார். இதுதொடர்பாகநுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வானதி சீனிவாசன் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் சூர்யா மீதுஎழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்ததற்காக கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சூர்யா கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில்விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. அப்போது சூர்யா நீதிபதிகோவிந்தராஜுலு முன்பு ஆஜரானார். பின்னர் அரசுத் தரப்பு சாட்சிகள் நான்கு பேர் வாக்குமூலம் கொடுத்தனர்.
சாட்சிகள் வானதி சீனிவாசன், தணிக்கை வாரிய மண்டல அதிகாரி தனசேகர், அலுவலக உதவியாளர் ராஜன், திரைப்பட எடிட்டர்கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்தனர். அவர்களது வாக்குமூலங்களை நீதிபதி பதிவு செய்துகொண்டார். அதன் பின்னர் வழக்கு விசாரணை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications