மக்களுக்கு விஜயகாந்த் நல்லது செய்ய வேண்டும்: ரோஜா
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
மக்களை நம்பி அரசியலுக்கு வரும் நடிகர் விஜயகாந்த் அந்த மக்களுக்கு பல நன்மைகளை செய்ய வேண்டும் என்று நடிகைரோஜா கூறியுள்ளார்.நெல்லை மாவட்டம் திசையன்விளையில் செய்தியாளர்களிடம் ரோஜா பேசுகையில், மக்களை நம்பி அரசியலுக்கு வருகிறார்விஜயகாந்த். அவரது அரசியல் பிரவேசத்தை நான் மனதார வரவேற்கிறேன். எந்த மக்களை நம்பி வருகிறாரோ, அவர்களுக்குநிறைய நன்மைகளை அவர் செய்ய வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார். மிகவும் துணிச்சலாக,நேர்மையாக நடக்கும் அவர் பெண்கள் நல்வாழ்வுக்காக பல நன்மைகளை செய்து வருகிறார். அவரது அரசியல் துணிச்சல், மன தைரியம், பென்களுக்கு பெரும் டானிக் ஆகஅமைந்துள்ளது. அடுத்த தேர்தலிலும் அவரே மீண்டும் முதல்வர் ஆவார் என்றார் ரோஜா.












Click it and Unblock the Notifications