காவிரிக் குழப்பத்திற்கு கருணாநிதியே காரணம்: ஜெ.
தஞ்சாவூர்:
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே நிலவும் குழப்பத்திற்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம் எனமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் ரூ. 250 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகளைவழங்கிய ஜெயலலிதா காவிரிப் பிரச்சினையை மையமாக வைத்துப் பசினார்.ஜெயலலிதா பேசுகையில், 1972ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, காவிரிப் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்தொடரப்பட்ட வழக்கை அவர் வாபஸ் வாங்கவில்லை. அப்படி வாபஸ் பெற்றிருந்தால் இப்போதைய இந்த சிக்கலான நிலைஇருந்திருக்காது. கருணாநிதிதான் காவிரிப் பிரச்சினையை சிக்கலாக்கி விட்டார்.
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசின் அங்கம் வகிக்கும் திமுக, பாமக போன்ற கட்சிகள், தமிழகத்திற்கு உரியகாவிரி நீரைப் பெற்றுத் தர தவறி விட்டன. காவிரி நீர் உரிய நேரத்தில் தமிழகத்திற்கு வராததற்கு இந்தக் கட்சிகளே பொறுப்பேற்கவேண்டும்.
காவிரிப் பிரச்சினையில் நான் மிகவும் மெத்தனமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறும் புகாரில் துளியும் உண்மை இல்லை.தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற நான் பல வழிகளிலும் முயற்சித்துள்ளேன். பல முறை பிரதமருக்கும், கர்நாடக முதல்வருக்கும் கடிதம்எழுதியுள்ளேன். என்னை குறை சொல்லிக் கொண்டே இருப்பதுதான் எதிர்க்கட்சிகளின் வேலை. அந்த வகையில்தான் காவிரிப்பிரச்சினையிலும் என்னைக் குறை சொல்கிறார்கள்.
கர்நாடக அரசு எப்போதுமே உபரி நீரை மட்டுமே தமிழகத்திற்கு விடுவித்து வருகிறது. தமிழகத்தின் பங்கு நீரை எப்போதுமே அதுவழங்கியதில்லை.
கர்நாடகத்தில் மழை இல்லாவிட்டாலும் கூட நமது பங்கு நீரை அது தர வேண்டும். அப்போதுதான் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத்தீர்ப்பின்படி கர்நாடகம் நடப்பதாக அர்த்தம். மாநிலத்தின் உரிமையும், காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளின் நலனும் காக்கப்படவேண்டும் என்பதில் தமிழக அரசு எப்போதுமே அக்கறையுடனும், உறுதியுடனும் உள்ளது என்றார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications