பொய் சொல்கிறார் ஜெயலலிதா: கருணாநிதி
சென்னை:
காவிரிப் பிரச்சினைக்கு நான்தான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதில் சற்றும் உண்மை இல்லை. இந்த விவகாரத்தில்ஜெயலலிதா மீண்டும் பொய் சொல்லியுள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை கடந்த 1972ம் ஆண்டு திமுக அரசு வாபஸ்பெற்றதால்தான் அந்த விவகாரம் இவ்வளவு சிக்கலாகியுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதியைக் குற்றம் சாட்டி முதல்வர் ஜெயலலிதாதஞ்சையில் நடந்த அரசு விழாவில் பேசியிருந்தார்.இதற்கு கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 1972ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில்நிலுவையில் இருந்த காவிரிப் பிரச்சினை தொடர்பான வழக்கை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு வாபஸ்பெற்றது. இருப்பினும், அப்போதைய திமுக அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, எப்போது வேண்டுமானாலும் இந்த வழக்கு மீண்டும்நடத்தப்படும் என்ற நிபந்தனையுடன் வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
என் மீது விஷம் கக்கியுள்ள ஜெயலலிதா இந்த விஷயத்தை வசதியாக மறைத்து விட்டார். இதே புகாரைத்தான் கடந்த 2002ம் ஆண்டுஏப்ரல் மாதம் சட்டசபையிலும் தெரிவித்தார் ஜெயலலிதா. அப்போது காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் உண்மை நிலையைவிளக்கினார். இதையடுத்து வாய் தவறி அப்படிச் சொல்லி விட்டதாக தெரிவித்தார் ஜெயலலிதா.
இப்போது மீண்டும் அதே பழைய புகாரை மறுபடியும் சொல்லியுள்ளார் ஜெயலலிதா. அவர் சொல்வது பொய் என்பது மீண்டும்நிரூபணமாகியுள்ளது. ஒரு வேளை மீண்டும் வாய் தவறி விட்டதோ என்னவோ என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications