60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து 12 வயது சிறுவன் சாதனை
சென்னை:
12 வயதே ஆகும் பள்ளிச் சிறுவன், தொடர்ந்து 60 மணி நேரம் நீரில் மிதந்து சாதனை படைத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 24 வயதாகும் தாஜூமி என்ற இளம் பெண் கடந்த 3ம் தேதி தொடர்ந்து 54மணி நேரம் 27 நிமிடங்கள்இடைவிடாமல் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்தார். கடந்த 1987ம் ஆண்டு சண்முகம் என்பவர் தொடர்ந்து 51 மணி நேரம் 10நிமிடங்கள் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்திருந்தார். அதை தாஜூமி முறியடித்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார்.இந்த நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 12 வயதாகும், 7வது வகுப்பு படிக்கும் மாணவர் சுதர்சன், தாஜூமியின் சாதனையை முறியடிக்கஉறுதி பூண்டார். கடந்த 8 நாட்களாக இதற்காக சிறப்புப் பயிற்சிகள் பெற்ற சுதர்சன், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மாநகராட்சிநீச்சல் குளத்தில் தனது சாதனையைப் படைக்க முடிவு செய்தார். இதற்கு மாநகராட்சி ஆணையர் விஜயக்குமாரும் அனுமதி அளித்தார்.
இதையடுத்து செப்டம்பர் 7ம் தேதி காலை 8 மணிக்கு தனது சாதனை செயலை தொடங்கினார் சுதர்சன். அவருக்குத் துணையாகபயிற்சியாளர் முனியாண்டியும் நீச்சல் குளத்தில் இருந்தார். ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு முறை 10 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தபடி இருந்தார் சுதர்சன்.
வெள்ளிக்கிழமை மாலை சுமார் 2 மணி நேரத்திற்கு கன மழை பெய்தபோதும் கூட சுதர்சன் மனம் தளராமல்ே மிதந்தபடி இருந்தார். இரவு 8மணியளவில் அவர் தனது சாதனையை முடித்து விட்டு வெளியே வந்தார். சுமார் 60 மணி நேரம் சுதர்சன் தண்ணீரில் மிதந்தபடி இருந்துதாஜுமியின் சாதனையை முறியடித்தார்.
தண்ணீரை விட்டு வந்த பின்னர் செய்தியாளர்களிடம் சுதர்சன் பேசுகையில், தாஜுமியின் சாதனைதான் என்னை ஊக்குவித்து, இந்தப் புதியசாதனையை செய்யத் தூண்டியது. ஒலிம்பிக் நீச்சல் போட்டியில்க லந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். அதற்காக சிறப்புப் பயிற்சிகளும்பெற விரும்புகிறேன் என்றார் சுதர்சன்.


Click it and Unblock the Notifications
