ஜெ.வின் சலுகை சாகசம்: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
நாகர்கோவில்:
சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து சலுகைகளை அள்ளித் தந்து சாகசம் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா எனஅக்கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த நான்கரை ஆண்டு காலஅதிமுக ஆட்சியில்மக்களுக்காக ஒன்றும் நடக்கவில்லை. இந்த அரசின் சாதனை என்ன என்பதை முதல்வர் ஜெயலலிதா விளக்க வேண்டும்.காவிரிப் பிரச்சினையில் தமிழக அரசு மிகவும் மெத்தனமாக உள்ளது. ஒரு முறையாவது முதல்வர் ஜெயலலிதா கர்நாடகமுதல்வரை இதுதொடர்பாக சந்தித்தாரா? காவிரி ஆணையத்தைக் கூட்ட உறுதியாக வலியுறுத்தினாரா என்றால் இல்லை.
காவல்துறையில் சில கருப்பு ஆடுகள் இருப்பதாக காவல்துறை தலைவரே கூறுகிறார். கொலை, கொள்ளைச் சம்பவங்கள் பெருத்துவிட்டன. காவலர்கள் சிலரே கொள்ளையடிக்க ஆரம்பித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் சலுகைகள் எல்லாமே தேர்தலை மனதில் வைத்துத்தான். இதை மக்களும் புரிந்துள்ளார்கள்.எனவே அவர்கள் ஜெயலலிதாவின் ஏமாற்று அறிவிப்புகளுக்கு மயங்கி விட மாட்டார்கள். அவரது சாகசத்திற்கு ஏமாந்து விடமாட்டார்கள்.
தமிழக ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் பிளவு ஏற்படாது. நாங்கள் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என்றார்வரதராஜன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications