பட்டாசு விபத்து: பலியானோர் எண்ணிக்கை 7 ஆனது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆனது.சிவகாசி அருகே கிச்சிநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் காய வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில்தீப்பற்றிக் கொண்டதில் அவை வெடித்துச் சிதறின. இதில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
இந்த விபத்து தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications