மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.மேட்டூர் அணை சில நாட்களுக்கு முன்பு தனது முழுக் கொள்ளளவான 120 அடியைத் தொட்டது. தொடர்ந்து நல்ல மழை பெய்துகொண்டிருந்ததால், உபரி நீர் முழுவதுமாக திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் மழை நின்றதால் நீர் வரத்தும் நின்றது.
இதைத் தொடர்ந்து அணையின் நீர் இருப்பு 118 அடியாக குறைந்தது. தற்போது கர்ாநாடக பகுதிகளில் நல்ல மழை பெய்துவருவதால் மேட்டூர் அணைக்கு கூடுதல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் 119 அடி நீர்அதாவது 91.946 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 23,258 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.அணையிலிருந்து விநாடிக்கு 18,571 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications